'என்னவா இருக்கும்? என சில மாதங்களாக மண்டை காய்ந்து கொண்டிருந்த தமிழனுக்கு நேற்று மாலை தான் விடை கிடைத்திருக்கிறது.
'மக்கள் நீதி மய்யம்'. கமல் படங்களைப் போலவே கட்சிப் பெயரும் லோகோவும் வித்தியாச மாகத்தான் இருக்கின்றன.
அவர் இரண்டையும் அறிமுகப் படுத்திய அடுத்த நொடியிலிருந்து ஆளாளுக்கு மீம்ஸ், டீகோடிங் என பரபரப்பு கிளப்பு கிறார்கள்.
கமலே தெளிவுரை விளக்கம் வேறு கொடுத்தி ருக்கிறார். நாமும் நம் பங்கிற்கு அவர் கட்சிப் பெயரையும் சின்னத்தையும் டீகோட் செய்ததிலிருந்து...!
* தமிழ் நாட்டில் கட்சி தொடங்கி னால் திராவிட, தமிழர், கழகம், கட்சி போன்ற வார்த்தைகள் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், முதன் முறையாக 'மய்யம்' என அறிவித்திருக்கிறார் கமல். 80 களில் கமல் நடத்தி வந்த பத்திரிகை யின் பெயர் 'மய்யம்'.
பொது வாகவே எழுத்தாளர் களை அரசியல் வாதிகள் மதிப்பதில்லை என்ற குரல்கள் கேரளா நீங்கலாக மற்ற இடங்களில் கேட்பதுண்டு.
இது நாள் வரை ஓரங்கட்டப் பட்ட எழுத்தாளர் களையும் அரவணைத்துச் செல்லும் அமைப்பாக இது இருக்கும் என்பதைத் தான் இந்தப் பத்திரிகைப் பெயர் குறிக்கிறது.
* கட்சி லோகோவை குறுகுறுவென உற்றுப் பார்த்தால் இதற்கு முன் எங்கேயோ பார்த்தது போலவே இருக்கிறது. யெஸ்... பிக்பாஸ் லோகோவே தான்! நடுவே வட்டமாக ஒரு கண், அதைச் சுற்றி ஒரு நீள்வட்டம்!
போக, வையாபுரி, பரணி, சினேகன் எனக் கூடவே பிக் பாஸ் செட்டையும் அழைத்துச் செல்கிறார்.
அந்நிகழ்ச்சி யின் கேப்ஷனான 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' என்பதை ஊழல்வாதி களுக்கு எதிரான எச்சரிக்கை யாகப் பதிவு செய்திருக் கிறார் கமல் என்றால் அது மிகையாகாது.
* சின்னத்தை தட்டை யாக்கிப் பார்த்தால் பறக்கும் தட்டு போலவே இருக்கிறது.
கமல் தனது ஆஸ்தான குருவாக நினைப்பது அப்துல் கலாமை! அவர் விண்வெளித் துறையில் செய்த சாதனைகளை உலகமே அறியும்.
அவரை மரியாதைக் குட்படுத்தும் விதமாகவே அவர் ஊரிலிருந்து பயணத்தைத் தொடங்கிய தோடு மட்டு மல்லாமல் பறக்கும் தட்டு குறியீடை யும் வைத்திருக் கிறார் கமல்.
* கமலின் லோகோ கூகுள் க்ரோம் போல இருப்பதாக சமூக வலை தளங்களில் சிலர் சொல்லி வருகிறார்கள் சிலர்.
ஏன் இருக்கக் கூடாது? சினிமா வின் எக்சைக்ளோ பீடியாவாக கமல் இருக்கும் போது அவர் தொடங்கும் கட்சி, அரசியலின் கூகுளாக இருக்கக் கூடாதா?
'இங்கே கேட்டது எல்லாம் கிடைக்கும் எம் மக்களுக்கு' என்பதை குறியீடு மூலமாக உணர்த்து கிறார் கமல் என்பதை நாம் உணர வேண்டும்.
* ஆறு கைகள், சிவப்பு, வெள்ளை, கறுப்பு ஆகிய நிறங்கள் கொடியில் இடம் பெற்றிருக் கின்றன. ஆறு கைகள் தமிழக த்தின் ஆறு பெரிய கட்சி களையும் சிவப்பு, வெள்ளை, கறுப்பு அவற்றின் கட்சிக் கொடிகளை யும் குறிக்கிறது.
நட்சத்திரம் வி.சி.கவைக் குறிக்கிறது. இந்தக் கட்சிகள் அனைத்தோடும் இணைந்து தமிழர் நலனுக் காக குரல் கொடுப்பேன் என்பதைத் தான் கமல் சொல்ல வருகிறார்.
மாற்றுக் கட்சிகளி லிருந்து வருபவர் களுக்கும் எங்களிடையே இடமுண்டு என அவர் சொல்வதா கவும் எடுத்துக் கொள்ள லாம்.
* இந்தியத் தேசியமே முக்கியம் எனச் சொல்லி யிருக்கிறார் கமல். இதன் மூலம் தமிழ் தேசிய வாதிகளுக்குக் கடுமை யான ஏமாற்றத்தை பரிசளித் ததோடு கொடியின் நடுவே அசோக சக்கரத்தைக் குறிக்கும் வட்டத்தையும் வைத்திருக் கிறார்.
தேக்க நிலையில் இருக்கும் அரசு இயந்திர த்தை ஓட வைக்கும் சக்கரமும் அதைச் சுற்றி இருக்கும் சைக்கிள் செயினுமாக இருப்போம் என்பதை இந்த வட்டம் வழியாகச் சொல்ல வருகிறார் என்பதாக வும் இதை எடுத்துக் கொள் ளலாம்.
Thanks for Your Comments