பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு... தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தவர்களின் கனவுகளை பெரும் பாலும் ஊடகங்களே நிரப்பிக் கொள்ளும், அவர் மருத்துவர் ஆக விரும்புகிறார்.
அவர் மாவட்ட ஆட்சியர் ஆக விரும்பு கிறார்... என்று மாணவர் களின் எதிர் காலத்தை, அவர்களை சுற்றி நின்று கொண்டிருப் பவர்கள் நிர்ணயம் செய்வார்கள்.
குழந்தை களும், தங்கள் பெற்றோர் களின் அபிலாஷை களை பூர்த்தி செய்த திருப்தி யுடன் பாவமாக நின்று கொண்டி ருப்பார்கள். இது வழமை யான நிகழ்வு தான்.
ஆனால், இதில் கொடுமை யான நிகழ்வு என்ன வென்றால், மதிப்பெண் குறைந் தவர்கள் அல்லது
தேர்வில் தோல்வி யுற்றவர்கள், உன்னதமான வாழ்வின் மீது அனைத்து நம்பிக்கை களையும் இழந்து,
இது தான் அடையா ளங்கள் என்று கற்பிக்கப் பட்ட அனைத்தை யும் இழந்து நின்று கொண்டி ருப்பார்கள்.
மதிப்பெண் மட்டும் தான் வாழ்வு என்று நம்பும் சமூகம் அவன் மீது மேலும் மேலும் அழுத்தங் களை திணிக்கும். வாழ்வு சூன்யமாகி விட்டது என்று நம்ப வைக்கும்.
ஏன் அவனோ/ அவளோ தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளக் கூட தூண்டும்.
இப்போது தான் அந்த மாணவனு க்கு பள்ளியின், ஆசிரியரின், பெற்றோரின் அரவணைப்பு தேவைப் படுகிறது...
'கல்வி, வாழ்விற்கு நல்ல ஊன்று கோல்' என்றாலும், இங்கு அனைவரும் சுயமான கால்களுடன் பிறந்தவர்கள் என்ற நினைவூட்ட வேண்டியது,
இப்போது அந்தக் குழந்தை களின் எதிர் காலத்தின் மீது அக்கறை கொண்ட அனைவரின் கடமை.
வெற்றி யாளர்கள் படுதோல்வி களை சந்தித்தவர்கள் :
இது வழக்கமான் ஆறுதல் வார்த்தைகள் தான் என்றாலும், இதில் உண்மை யில்லாமலும் இல்லை.
பெரும் பாலான வெற்றி யாளர்கள் தங்கள் இளமை காலத்தில் படுதோல்வி களை சந்தித்த வர்கள்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் :
இன்று மேதை என்ற வார்த்தை க்கு அர்த்தமாக பார்க்கப்படும் ஆல்பர்ட் என்ஸ்டீன், தன் இளமை காலத்தில் முட்டாளாக பார்க்கப் பட்டவர்.
நான்கு வயது வரை அவருக்கு பேச்சு வரவில்லை. ஏழு வயது வரை எதையும் வாசிக்க முடியாமல் திணறி இருக்கிறார்.
பள்ளி நிர்வாகம் இவருக்கு கல்வி யளிப்பது சமூகத்திற்கு எவ்விதத் திலும் பயன் தராது என்று வெளியே அனுப்பியது. ஆனால் இன்று...?
சார்லஸ் டார்வீன் :
டார்வீன், தன் இளமை காலத்தில் சோம்பேறி என்றே அனைவ ராலும் அழைக்கப் பட்டார்.
தன் சோம்பேறி தனத்திற்காக பள்ளி நிர்வாகத் திடமும் , அப்பாவிட மும் கடும் தண்டனைகளையும் பெற்று இருக்கிறார்.
ஐசக் நியூட்டன் :
பள்ளி காலத்தில் படுதோல்வி களை சந்தித்தவர் ஐசக் நியூட்டன். பள்ளி படிப்பு வராததால்,
தங்கள் பூர்வீக பண்ணையை கவனித்துக் கொள்ள அவர் பணிக்கப்ப ட்டார். ஆனால், அதிலும் தோல்வியை சந்தித்தவர் அவர்.
தாமஸ் எடிசன் :
தாமஸ் எடிசனும் இதற்கு விதி விலக்கல்ல. பள்ளி காலத்தில் எதற்கும் லாயக்கற்றவர் என்றே அடையாளம் காணப்பட்டவர் அவர்.
ஒரு அறிவிய லாளராக, மோசமான 1000 தோல்வி களுக்கு பின்னரே மின்சார விளக்கை கண்டு பிடித்தார்.
வின்ஸ்டன் சர்ச்சில் :
போர் காலத்தில் பிரிட்டனை வழிநடத்திய வின்ஸ்டன், தனது ஆறாம் வகுப்பில் தோல்வி யுற்றவர் என்றால் நம்ப முடிகிறதா...?
ஆம். மோசமான தோல்வி களுக்கு பின்னரே அவர் சிகரம் தொட்டார்.
இவர்கள் மட்டு மல்ல, ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க், ஹாரி பாட்டர் நாவலை எழுதிய ஜே.கி ரவுலிங் என்று
உலக அளவில் இந்த பட்டியல் மிக நீளம். நமக்கு இந்திய அளவிலும் நடிகர் கமல் துவங்கி, பல முன்னு தாரணங்கள் இருக்கின்றன.
இவை வெற்று சமாதானங்கள் அல்ல :
இவை வெற்று சமாதானங்கள் அல்ல. இது தான் நிதர்சனமும் கூட. நாம் இயல்பாக குழந்தைகளுக்கு என்ன வருகிறதோ,
அதை மெருகேற்ற உதவி புரியாமல், சந்தைக்கு என்ன தேவையோ அதை திணிக்க முயல் கிறோம்.
சந்தை நிலை இல்லாதது, அது காலத்திற்கு ஏற்றார் போல் மாறும். அதற்கு ஏற்றார் போல்
தம் பிள்ளைகள் ஆட வேண்டும் என்று நினைப்பது முட்டாள் தனம் மட்டும் அல்ல.
நிலையான வெற்றிக்கு உகந்ததும் அல்ல. ஆம். உங்கள் பிள்ளைகள் உண்மையாக வாழ்வில்
வெற்றி பெற வேண்டு மென்று விரும்பு வீர்களாயின், அவர்கள் பறவைகள் என்று உணருங்கள். அவர்களது சிறகுகளை வெட்டி ஓட்டப் பந்தயத்தில் ஓட விடாதீர்கள்.
லிங்கனிடமிருந்து பயிலுங்கள்:
அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன், தனது மகன் படித்துக் கொண்டிருந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதம், கல்வி குறித்து பல புரிதல் களை ஏற்படுத்தக் கூடியது.
அதில் அவர், “என் மகனுக்கு... தோல்வியி லிருந்து படிப்பினை பெறவும் வெற்றியை அனு பவிக்கவும் கற்றுக் கொடுங்கள்,
பொறாமை யில் இருந்து விலகி நிற்க, அவனுக்குப் பயிற்று வியுங்கள். ஆரவார மில்லாமல் அமைதி யாக இருந்தால் வாழ்வு இன்பத்தைத் தரும் என்று உணர்த்துங்கள்.
புத்தகங்க ளில் பொதிந்துள்ள அற்புதங் களை அவனுக்கு சொல்லி கொடுங்கள்.
அதே சமயம் நீலவானில் சிறகடித்துப் பறக்கும் பறவை களின் புதிரையும், சூரிய ஒளியில் கண் சிமிட்டும் தேனீக்களின் சுறு சுறுப்பையும்
பச்சைப்பசேல் என்ற மலைப் பரப்பில் விரிந்து பரந்திரு க்கும் பூக்களின் மலர்ச் சியையும் ரசிக்க, சிந்திக்க அமைதியான மன நிலையை அவனுக்கு அளியுங்கள்...
பள்ளியில் ஏமாற்று வதை விட, தோல்வி அடைவது பல மடங்கு கண்ணிய மானது என்பதை அவனுக்கு உணர்த்துங்கள்.
மற்றவர்கள் அனைவரும் தவறு என்று தகிடுதத்தம் செய்தாலும் தனது எண்ணங்கள் சரியானவை
என்று உறுதி கொள்ளும் அளவுக்கு அவனுக்கு தன்னம் பிக்கை ஊட்டுங்கள்...
குறிப்பாக, தன் மீது அபரிமித நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்;
அப்போது தான் மனிதகுலம் மீது அவன் அபரிமித நம்பிக்கை கொண்டிருப் பான் என்று எழுதினார்.
ஆனால், இப்போது வணிக மயமான கல்வி சூழலில், ஆசிரியரு க்கும் மாணவரு க்கும் எந்த உணர்வு பூர்வமான பந்தமும் இல்லாத போது, இத்தகைய கடிதத்தை நாம் எழுத முடியாது.
ஆனால், தங்களது பிள்ளைகள் மீது உண்மை யாக பாசமும், அக்கறையும் இருக்கு மாயின், பெற்றோர்கள் லிங்கன் எழுதியதை தான் செய்ய வேண்டும்.
தேர்வு தோல்விகள், வாழ்கை மீதான குழந்தை களின் நம்பிக்கைகளை எக்காரணம் கொண்டும் சிதைத்து விட அனுமதிக்கக் கூடாது.