தூத்துக்குடியில் மாணவர்கள் மீண்டும் போராட்டம் !

0
தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர உற்பத்தி ஆலை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப் பட்டு வந்தது. 
தூத்துக்குடியில் மாணவர்கள் மீண்டும் போராட்டம் !
மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்கம் செய்ய பணிகள் தொடங்கப் பட்டது. 

இதற்கு தூத்துக்குடி பகுதி பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகி றார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை யால் சுற்றுச் சூழல் மாசுபடு கிறது. பொது மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது என கூறி, ஆலையை நிரந்தர மாக மூட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதற்காக அ.குமரெட்டியா புரத்தில் பொது மக்கள் 61-வது நாளாக போராட்டம் நடத்தி வருகி றார்கள். 
மேலும் பண்டாரம் பட்டி, சில்வர்புரம், சங்கராப்பேரி உள்ளிட்ட 12 இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பொது மக்களின் போராட்டத் துக்கு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இந்த நிலை யில் பராமரிப்பு பணி காரண மாக ஆலை கடந்த‌ 26-ந்தேதி முதல் மூடப்ப‌ட்டு உள்ளது. 

இதனிடையே அ.குமரெட்டியா புரத்தில் போராட்டம் நடத்தி வரும் பொது மக்களை நேற்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சந்தித்து ஆதரவு தெரிவித்தார். 

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி யில் மீண்டும் மாணவர்கள் போராட்ட த்தில் ஈடுபட்டு உள்ளார்கள்.
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி, காமராஜ் கல்லூரி, கோரம் பள்ளம் அரசு ஐ.டி.ஐ மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து அந்தந்த கல்லூரிகள் முன்பு அமர்ந்து போராட்ட த்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தர மாக மூடவேண்டும் என கோ‌ஷம் எழுப்பி னார்கள்.

இதை யடுத்து மாணவர்கள் அங்குள்ள வி.வி.டி சிக்னல் பகுதியில் இருந்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி யாக புறப்பட திட்ட மிட்டனர். 
இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப் ப‌ட்டார்கள். அதிரடிப் படை போலீசாரும் அங்கு வர வழைக்கப் ப‌ட்டனர். 

இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் மாணவர்கள் பஸ்சில் எறி கலெக்டர் அலுவலக த்துக்கு சென்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings