திடீர் திடீரென்று உடையும் ஏர் இந்தியா விமானம் !

கடந்த வெள்ளிக்கிழமை ஏர் இந்தியா விமானம் ஒன்றில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அதன் உட்பக்க பாகங்கள், விமானம் பறக்கும் போதே உடைந்து விழுந்துள்ளது. 
திடீர் திடீரென்று உடையும் ஏர் இந்தியா விமானம் !
இதை யடுத்து விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப் பட்டது. அமிர்த சரசில் இருந்து டெல்லி சென்ற விமான த்தில் இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. 

ஏர் இந்தியா விற்கு சொந்தமான போயிங் 787 ரக விமானங் களில் இந்த பாதிப்பு ஏற்பட் டுள்ளது,. 

விமானத்தின் உட்பக்க பாகங்கள் உடைந்து அங்கு இருந்த பயணி களின் மீது விழுந் துள்ளது. இதில் உள்ளே இருந்த பயணி களுக்கு மோசமான காயம் ஏற்பட்டு இருக்கிறது.

என்ன விஷயம் நடந்தது

அந்த விமானம் சென்று கொண்டு இருக்கும் போதே, பாதியில் பெரிய அளவில் சத்தம் கேட்டு இருக்கிறது. இதனால் உள்பக்கம் பெரிய அளவில் பொருட்கள் ஆடி இருக்கிறது. 

இந்த நிலையில் பயணிகளின் இருக்கை க்கு மேல் பக்கம் உடைந்து விழுந்து இருக்கிறது. அங்கு இருந்த பயணிகளின், தலையில் விழுந்து காயம் ஏற்பட்டு இருக்கிறது. 
அதே போல் அவசரத்திற்கு கொடுக்கப் படும், ஆக்சிஜன் டியூப்கள் வெளியே வந்துள்ளது.

எத்தனை பேர்

இதனால் மொத்தம் 3 பேருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. பயணிகள் உட்கார்த்து இருக்கும், மேற்பகுதி உடைந்து தலையில் விழுந்ததை அடுத்து மோசமாக காயம் ஏற்பட்டு இருக்கிறது. 

இதில் ஒரு பயணி மோசமாக காயம் அடைந்துள்ளார். பின் விமானம் தரை யிறக்கப்பட்ட போது, அந்த பயணி களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது.

காரணம்
விமானம் 8000 அடி தூரத்தில் இருந்து, 20,000 அடி தூரத்திற்கு சென்று கொண்டு இருக்கும் போது, ஏற்பட்ட திடீர் பிரச்சனை காரணமாக இப்படி நடந்து இருப்ப தாக கூறப்படு கிறது. 

''டர்புலன்ஸ்'' எனப்படும் விமானங் களில் ஏற்படும் பிரச்சனை அதிக மானதை அடுத்து, உட்பக்க த்தில் பாகங்கள் ஆடியது என்று கூறப்படு கிறது. மிகவும் பழைய விமானங் களில் மட்டுமே இப்படி நடக்கும் என்று கூறப் படுகிறது.

விசாரணை

ஒரு விமானத்தில் ஏன் இப்படி பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது என்று விசாரணை நடத்தப்படும் என்று ஏர் இந்தியா நிர்வாகிகள் கூறி யுள்ளனர். 
விமானம், பழைய விமானமாக இருப்பதால் இப்படி பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படு கிறது. பாதிக்கப் பட்ட பயணிகளை இதுகுறித்த புகார் அளிக்க இருப்பதை கூறப்படு கிறது.
Tags:
Privacy and cookie settings