இளைஞரை கொடூரமாகத் தாக்கிய தி.நகர் காவல் அதிகாரிகள் !

0
தி.நகரில் தாய் மற்றும் சகோதரியுடன் பொருட்களை வாங்க வந்த இளைஞர் போக்குவரத்து காவல் துறையினருடன் ஏற்பட்ட மோதலில் அவரை மூன்று அதிகாரிகள் தாக்கும் காட்சி வைரலாகி வருகிறது.
இளைஞரை கொடூரமாகத் தாக்கிய தி.நகர் காவல் அதிகாரிகள் !
சென்னை வடபழனி தெருவில் வசிப்பவர் பிரகாஷ் (21) தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராகப் பணியாற்று கிறார். இவரது தாயார் வீட்டு வேலை செய்து வருகிறார். சகோதரி படித்து வருகிறார்.

இந்நிலையில் தனது வீட்டுக்கு சில பொருட்களை வாங்க தனது தாயார் மற்றும் சகோதரி யுடன் தி.நகருக்கு வந்துள்ளார். 

பொருட்களை வாங்கிய பின்னர் தனது தாய், சகோதரியுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்ப வந்துள்ளார். அப்போது போக்கு வரத்து போலீஸார் அவர்களை மடக்கி யுள்ளனர்.

'ஏன் ஹெல்மட் போட வில்லை' என்று போக்குவரத்து காவல் அதிகாரிகள் கேட்டுள்ளார்கள், பின்னர்,  'ஏன் மூன்று பேர் ஒரே வாகனத்தில் ஏன் வந்தீர்கள்' என்று போலீஸார் கேட்டுள்ளனர். 

'வசதி இல்லை என்பதால் மோட்டார் சைக்கிளில் வருகிறோம்' என்று பிரகாஷ் கூறி யுள்ளார். 
'வசதி இல்லை என்றால் எதற்கு தி.நகருக்கு ஷாப்பிங் வருகிறீர்கள், மூன்று பேர் ஆட்டோவில் வர வேண்டியது தானே? என்று பிரகாஷிடம் போலீஸ் ஆர்.எஸ்.ஐ ரமேஷ் கேட்டதாகக் கூறப் படுகிறது.

அப்போது பிரகாஷி ற்கும் மற்ற போலீஸ் அதிகாரிகளு க்கும் வாக்குவாதம் ஏற்பட் டுள்ளது. போலீஸார் வீடியோ எடுக்க பிரகாஷும் வீடியோ எடுத்துள்ளார். 

'அபராதம் கட்ட மாட்டாயா' என்று போலீஸார் அதில் கேட்பதும், 'அபராதம் கட்ட மாட்டேன் என்று கூற வில்லை, 

ஆனால் ஆட்டோவில் போகச்சொல்ல இவர் யாரு' என பிரகாஷ் வாக்கு வாதத்தில் ஈடுபட, போலீஸார் பிரகாஷின் சட்டையைப் பிடித்து இழுக்க அவரது தாயார் தனது மகனை விட்டு விடும்படி கெஞ்சி யுள்ளார்.

அப்போது அவரது தாயாரையும், தங்கையை யும் போலீஸார் தள்ளி விட பிரகாஷ் போலீஸாரு டன் மோதலில் ஈடுபட தி.நகர் முழுதும் பொது மக்கள் முன்னிலை யில் 
காவல் அதிகாரிகள் 3 பேர் அந்த இளைஞரை கம்பத்தில் பிடித்து வைத்து கைகளை முறுக்கும் காட்சிகளும், அவரது தாயாரும், சகோதரியும் அவரை விட்டு விடும்படி கதறும் காட்சியும் வைரலாகி வருகிறது.

இது குறித்து தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரகாஷின் தாயார் சங்கீதா, ''தான் எவ்வளவோ கெஞ்சியும் போலீஸார் என் மகனை விட வில்லை, 

கெஞ்சி அழுது விட்டு விடும் படி கேட்ட தன்னையும் தாக்கினார் ஒரு அதிகாரி'' என்று கூறியுள்ளார். இந்தக் காட்சிகளும் தற்போது வைரலாகி வருகிறது. 3 அதிகாரிகள் இளைஞர் பிரகாஷை இழுத்துச் செல்வதும், 
வாலிபரை தாக்கிய போக்குவரத்து காவலர்கள் !
அவரது தாயார் சங்கீதா அவர்களிடம் கெஞ்சுவதும் பின்னர் அதில் ஒரு அதிகாரி அவரைப் பிடித்து தடுத்து தள்ளி விடுவதும் பதிவாகி உள்ளது.
இதற்கிடையே போலீஸாரி டம் வாக்குவாதம் செய்து தகராறு செய்ததாக இளைஞர் பிரகாஷை 294 (b), 332,427 ஆகிய 

பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், பிரகாஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். thehindu
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings