ரயில் டிக்கெட்டுகளை இனி தமிழ் மொழியிலும் பெறலாம் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், ரயில்வே பயணிகள் இனிமேல் முன்பதிவு செய்யப்படாத
டிக்கெட்டுகளை தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்ப கட்டமாக சென்னை சென்ட்ரல், திருச்சி, சேலம், மதுரை ஆகிய 4 ரயில் நிலையங் களில் தமிழில் டிக்கெட்டுகள் கிடைக்கும் என்றும்,
காலப் போக்கில் மற்ற ரயில் நிலையங்களிலும் இந்த முறை அறிமுகப் படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.