கங்காருவை தாவி ஓட வைக்க கல்லால் அடித்த பார்வையாளர்கள் !

சீனாவில் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் செங்கற் களால் தாக்கியதில் கங்காரு ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. மற்றொரு கங்காரு காய மடைந்தது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 
கங்காருவை தாவி ஓட வைக்க கல்லால் அடித்த பார்வையாளர்கள் !
சீனாவின் தென் கிழக்கு பகுதியில் ஃயூஜியன் மாகாண த்தில் உள்ள ஃபூலோவ் உயிரியல் பூங்காவில் ஏராளமான கங்காருகள் பராமரிக்கப் பட்டு வருகி ன்றன. 

இங்கு வரும் பார்வை யாளர்கள் கங்காரு களை துள்ளி குதித்து ஓட வைப்பதற் காக கற்களை தூக்கி எறிவது வாடிக்கை யாக உள்ளது.

உயிரியல் பூங்கா நிர்வாகித்தினர் முறையாக கண்காணிக் காததால் இது போன்ற நிகழ்வுகள் தொடர்கின்றன. 

கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி பார்வை யார்கள் கல்லால் அடித்ததில், 12 வயதான பெண் கங்காரு ஒன்றுக்கு காலில் அடிபட்டது. 

பின் அது சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் இறந்தது. இந்த சம்பவம் நிகழ்ந்த சில வாரங்களில், அதே உயிரியல் பூங்காவில் உள்ள 5 வயதான ஆண் கங்காரு ஒன்றும் இதே போல் தாக்கப் பட்டுள்ளது. 
அந்த கங்காரு வுக்கு காலில் லேசாக அடிப்பட் டுள்ளது. வியாழக் கிழமை இரவு இது பற்றிய செய்தி வெளி யானதைத் தொடர்ந்து, விலங்கியல் ஆர்வலர்கள் கொந்தளிக்கத் தொடங்கி யுள்ளனர். 

இதை யடுத்து இது போன்ற தடுக்க, பார்வை யாளர்களை கட்டுப் படுத்தும், கண்காணிக் கவும் சி.சி.வி.டி. கேமராக்கள் பொருத்த பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

சம்பந்தப் பட்ட பகுதியில் இருந்து, கற்களை அகற்றிய பின்பும் வேறு இடத்தில் இருந்து கற்களை கொண்டு 

வரும் சுற்றுலாப் பயணிகள் விலங்கு களை தாக்குவதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். 

இதை யடுத்து கற்களை வீசிய சுற்றுலா பயணிகள் கைது செய்யப் படுவார்கள் என போலீசார் தெரிவித் துள்ளனர். 
சீனாவில் உயிரியல் பூங்காக்கள் சரிவரக் கண்காணிக்கப் படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது குறிப்பிடத் தக்கது. 

அடிக்கடி இது போன்று பூங்கா விபத்துக் களில் விலங்குகள் அல்லது மனிதர்கள் காய மடைவது அங்கு தொடர் கதையாகி வருகிறது. 

கடந்த சில மாதங் களுக்கு முன்னர், அங்குள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் புலி தாக்கியதில் பார்வை யாளர் ஒருவர் பரிதாப மாக உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது.
Tags:
Privacy and cookie settings