உலகின் மிக நீண்ட கடற்கரை அது. கடலின் நடுவே இருக்கும் தண்ணீர் அலைகளை எழுப்பி தன் சக்தியால் கரைகளுக்கு அனுப்புகிறது.
அலைகள் தன்னுடன் பயணிக்கும் கடல்வாழ் உயிரினங்களையும் சேர்த்துக் கொண்டு கரையைத் தொட்டு விட்டு மீண்டும் திரும்பி விடுகிறது.
ஆனால், கடல் வாழ் உயிரினங்களில் சிலவற்றை மட்டும் கரையில் துப்பி விட்டுச் சென்று விடுகிறது. அந்த உயிரினங்களை உண்ணும் பறவைகள் சாப்பிட அருகில் சென்று விட்டு பறந்து விடுகின்றன.
விலங்குகள் மட்டும் அந்த உயிரினங்களைச் சாப்பிடுகிறது. ஆனால், சாப்பிட்ட சிறிது நேரத்தில் அந்த விலங்கு களும் மடிந்து விடுகின்றன.
அதற்குக் காரணம், கடல்வாழ் உயிரினங்கள் உண்ட பிளாஸ்டிக்குகள் தாம். இது நடைபெறுவது வளர்ந்த நாடான பிரிட்டனில் தான்.
பிரிட்டன் கடலில் நிரம்பி யிருக்கும் பிளாஸ்டிக்குகளால் அந்நாடு மிகப்பெரிய அழிவினைச் சந்தித்து வருகிறது.
பொது வாகவே இது பெரும் பாலான நாடுகளில் இருக்கும் சூழலியல் சிக்கல் தான். பெருகி வரும் கடல் பிளாஸ்டிக்கு களால், அவற்றைத் தடை செய்யும் நடவடிக்கை யில் இறங்கி யிருக்கிறது,
அந்நாட்டு அரசு. பிரிட்டன் பிரதமர் தெரசா பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் ஆபத்து பற்றியும், அதனைக் கட்டுப் படுத்துவது குறித்தும் பேசியுள்ளார்.
மேலும், நீர்ம பொருள்களை அருந்தும் ஸ்ட்ரா போன்ற பிளாஸ்டிக் குழாய்களை பிரிட்டனில் தடை செய்ய இருப்ப தாகவும் அவர் பேசியுள்ளார்.
பிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் ஸ்ட்ராக்கள் பயன் படுத்தப்படுவ தாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித் திருந்தது.
கடல் மற்றும் அதன் கரை யோரமாக இருக்கும் பகுதிகளில் இருந்து அகற்றப்படும் பிளாஸ்டிக் கழிவுகளில் ஸ்ட்ராக்கள் அதிகமான அளவில் இருப்பதா கவும் அச்சங்கம் தெரிவித் துள்ளது.
விலங்குகள் மற்றும் கடல்சார் உயிரினங்களுக்கும் பிளாஸ்டிக் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது தவிர சுற்றுச் சூழலுக்கும் பிளாஸ்டிக் மிகப்பெரிய கேடுகளை விளைவிக்கிறது.
பிளாஸ்டிக்கு களால் ஏற்படும் பாதிப்பு களைக் கருத்தில் கொண்டு முதற் கட்டமாக அதிகமாகச் சேரும் ஸ்ட்ராக்கள்,
பிளாஸ்டிக் பட்ஸ் ஆகிய வற்றைத் தடை செய்ய அந்நாட்டுச் சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவெடுத் துள்ளது.
இது ஓர் ஆரம்பம் தான்... இதன் முழுமை யான பலன் இனி தான் தெரிய ஆரம்பிக்கும்.
இந்த ஸ்ட்ராக்கள் தடை சாத்தியப் பட்டால் முழுமை யாக பிளாஸ்டிக் பொருள் களுக்குத் தடை செய்து விடுவோம் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித் துள்ளது.
ஒரு மெல்லிய ஸ்ட்ரா மட்குவதற்கு சுமார் 400 வருடங் களுக்கு மேல் எடுத்துக் கொள்ளும்.
ஒவ்வோர் ஆண்டும் 8.5 மில்லியன் ஸ்ட்ராக்கள் சேர்ந்தால் எதிர் காலத்தில் கடற்கரை யின் முழுவதும் ஸ்ட்ராக்க ளால் நிரம்பி யிருக்கும்.
இதற்கு முடிவு கட்டும் விதமாக 2019-ம் ஆண்டின் இறுதிக்குள் பிளாஸ்டிக் ஸ்ட்ராக் களின் பயன்பாடு இல்லாத பிரிட்டனை அமைக்கச் சுற்றுச் சூழல் அமைச்சகம் திட்ட மிட்டுள்ளது.
இத்திட்டம் மட்டும் சாத்திய மானால் காமன்வெல்த் நாடுகளுக்கு பிரிட்டன் மிகப் பெரிய சவால் விடும்.
பிரிட்டன் அரசாங்கம் வளரும் நாடுகளில் மேற் கொள்ளும் கழிவு மேலாண்மை ஆராய்ச்சிக் காக 87.4 மில்லியன் டாலர் பணத்தை ஒதுக்கிக் கொண்டிருக் கிறது.
கடந்த ஜனவரி மாதம் பிரிட்டன் ஒரு தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, நுண்ணிய பிளாஸ்டிக் குகளுக்குத் தடை விதித்தது.
அதனால் தற்போதுவரை ஒன்பது பில்லியி னுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளே பிரிட்டனில் விநியோகம் செய்யப் பட்டுள்ளன.
கூடிய விரைவில் பிளாஸ்டிக்கை தடை செய்து இயற்கை வளத்தைக் காப்பதற்கும் முயற்சிகள் தீவிரமாக எடுக்கப் பட்டு வருகின்றன.
இத்திட்டம் முதல் கட்டமாக பிளாஸ்டிக் ஸ்ட்ராவில் தொடங்கி யுள்ளதால் ஓர் ஆண்டுக்கு ஒரு லட்சம் கடல்வாழ் உயிரினங் களுக்கும் மேல் காக்கப்படும் என பிரிட்டன் அரசாங்கம் சொல்லி யிருக்கிறது.
பிளாஸ்டிக் கழிவுகள் உபயோகிப்பது உலகின் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
வளர்ந்த நாடான பிரிட்டனில் 8.5 மில்லியன் ஸ்ட்ராக்கள் என்றால் அதைப் பற்றிய விழிப்பு உணர்வே இல்லாமல் இருக்கும் இந்தியா போன்ற
நாடுகளில் எத்தனை கோடி ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப் பட்டிருக்கும். எத்தனை விலங்குகள், உயிரினங்கள் அழிக்கப் பட்டிருக்கும்.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தை முடுக்கி விட்டு பிரிட்டன் அரசாங்கம் சுற்றுச்சூழலைக் காக்கத் தொடங்கி விட்டது.
இந்தியச் சுற்றுச் சூழல் அமைச்சகமும் கச்சா எண்ணெய்க் காகப் பூமியைத் தோண்டி சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் திட்டத்தை
ஓரம் வைத்து விட்டு சுற்றுச்சூழல் மாசுபாடுகளைக் குறைக்கும் திட்டத்தைக் காக்க முன் வர வேண்டும்.