காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் சிறுமி ஒருவர் சில கொடூரர்களால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்.
இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப் பட்டு இருக்கி றார்கள்.
இந்த கொலை சம்பவமும், அந்த சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொடுமை படுத்தப் பட்டதும் அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் இருக்கிறது.
மிகவும் தாமத மாகவே இந்த சம்பவம் வெளியே தெரிந்துள்ளது. அந்த சிறுமி கொல்லப் பட்டதை விட
அதை வைத்து பாஜக கட்சியினர் செய்யும் மோசமான அரசிய லும், இந்துத்துவா குற்ற வாளிகளை காப்பற்ற துடிக்கும் அவர்களின் எண்ணமும் அதிக அருவெறுப்பை தருகிறது.
யார் இவர்
முகமது யூசுப் புஜ்வாலா, நசீமா பிபி ஆகிய தம்பதி களுக்கு பிறந்தவர் தான் அந்த 8 வயது நிரம்பிய சிறுமி பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தார்.
முஸ்லிம் கள் அதிகம் வாழும் காஷ்மீரின், கத்துவா பகுதியில் வசித்து வந்தார். முஸ்லிம் களில் ஆடு, மாடு, குதிரை மேய்த்து பிழைப்பு நடத்தும் குஜ்ஜார் இனத்தை சேர்ந்த வர்கள் இவர்கள்.
மகள் காணவில்லை
கடந்த ஜனவரி 10 தேதி மதியம் சிறுமி காட்டில் விடப்பட்ட குதிரை களை தேடி சென்று இருக்கிறார். சரியாக மாலை 6 மணிக்கு மேல் குதிரைகள் மட்டுமே வீடு திரும்பி இருக்கிறது.
இரவு நேரம் ஆக, ஆக சிறுமி வீட்டிற்கு வரவே இல்லை. இதை யடுத்து சிறுமியின் தந்தை புஜ்வாலா தொடங்கி அந்த பகுதியில் வசிக்கும் சில ஆண்கள் சேர்ந்து சிறுமியை தேடி சென்று இருக்கி றார்கள்.
போலீஸ்
ஆனால் இரவு முழுக்க தேடியும் சிறுமி கிடைக்க வில்லை. இதை யடுத்து மறுநாள் காலையில் இருந்து இரண்டு நாட்கள் 20க்கும் அதிகமான நபர்கள் சேர்ந்து அந்த சிறுமியை காட்டில் தேடி யுள்ளார்.
அப்போதும் கிடைக்காத காரணத் தால் அந்த சிறுமியை பற்றி மாவட்ட போலீஸ் நிலைய த்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் போலீஸ் இதை விசாரிக் காமல், அந்த சிறுமி ஏதாவது பையனுடன் ஓடிப் போய் இருப்பார், எந்த பையன் ஊரில் காணவில்லை என்று பாருங்கள் என்று கிண்டல் செய்து இருக்கிறார்கள்.
குற்றவாளி
ஆனால் குஜ்ஜார் இன மக்கள் இதை விடுவதாக இல்லை. போலீசுக்கு எதிராக உடனே தெருவில் இறங்கி னார்கள்.
மக்கள் போராட்டம் வெடித்தது. இதை யடுத்து மாவட்ட நிர்வாகம் அந்த சிறுமியை தேடுவதற்கு தனிப்படை அமைத்தது.
இந்த படையில் தீபக் காஜூரியா என்ற போலீஸ் இடம் பெற்று இருந்தார். அவரும் இந்த கொலை யில் சம்பந்தப் பட்டவர்தான்.
5 நாட்கள்
குற்றவாளியே போலீஸ் குழுவில் இருந்த தால், அந்த சிறுமி கண்டு பிடிக்கப் படவே இல்லை.
இதை யடுத்து, சிறுமியின் பக்கத்து வீட்டு நபர்கள், மாடு மேய்க்கும் போது, அந்த சிறுமியின் உடலை கண்டு பிடித்து ள்ளனர்.
சரியாக 5 நாட்களு க்கு பின் சிறுமி உடல் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
சிறுமியின் கால், கைகள் உடைந்து, மண்டையோடு சிதைந்து, உடல் முழுக்க ரத்தமாக, கீறல் களுடன் கிடந்துள்ளார். உடல் நீல நிறத்தில் மாறி இருக்கிறது.
விசாரணை ஆணையம்
இதையடுத்து பொறுமை யாக 23ம் தேதி குற்றவாளி களை பிடிக்க விசாரணை ஆணையம் அமைக்கப் பட்டது.
6 நாட்களு க்கு பின்தான் இந்த விசாரணை ஆணையம் அமைக்கப் பட்டது. அத ன்படி சாஞ்சி ராம் என்ற 60 வயது முன்னாள் அரசு ஊழியரை யும்,
சுரேந்திர வர்மா, ஆனந்த் துட்டா, திலக் ராஜ், தீபக் காஜூரியா என்ற நான்கு போலீஸ் களையும், விஷால் என்ற சாஞ்சி ராமின் மகனையும், பர்வேஷ் என்ற அவரின் நண்பரை யும் கைது செய்தது.
யார் இவர்கள்
மொத்தம் 7 பேர் கைது செய்யப் பட்டார்கள். இதில் 2 பேர் 18 வயது நிரம்பாத சிறுவர்கள். 4 பேர் போலீஸ்கள். ஒருவர், சிறுமி வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி.
இவர்கள் எல்லோரும் பாஜக காட்சி யிலும், ஆர்எஸ்எஸ், ஹிந்துத்துவா அமைப்பி லும் இருப்ப வர்கள். வழக்கை விசாரித்த தீபக்தான் இதை இவ்வளவு நாள் திசை திருப்பி இருக்கிறார்.
கோவிலில்
அந்த சிறுமியை குதிரை மேய்க்கும் போது கடத்தி இருக்கி றார்கள். கோவிலில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர்.
ஆனால் பின் வன்புணர்வு செய்ய அந்த சிறுவர்கள் விரும்பிய தால், வன்புணர்வு செய்து கொலை செய்து இருக்கி றார்கள்.
4 நாட்கள் கொடுமைப் படுத்தி விட்டு தான் கொன்று இருக்கி றார்கள். இத்தனை யும் நடந்தது பாஜக கட்சியினர் அதிகம் மதிக்கும் ஒரு இந்து கோவிலில் என்பது குறிப்பிடத் தக்கது.
காரணம்
ஜம்முவில் இந்துக்கள் அதிகம் வசிக்கி றார்கள். காஷ்மீரில் முஸ்லிம்கள் அதிகம் இருக்கி றார்கள். ஆனால் கத்துவா பகுதியில் இரண்டு விதமான மக்களும் இருக்கி றார்கள்.
இந்துக்களின் நிலத்தில் முஸ்லிம் களின் கால்நடைகள் மேய்வது பிரச்சனை ஆகியுள்ளது.
இந்த முஸ்லிம் களுக்கு பாடம் புகட்டவே இந்துத்துவா ஆட்கள் அந்த சிறுமியை கடத்தி உள்ளனர். பின் மனம் மாறி கொலை வரை சென்றுள்ளது.
பாஜகவின் அரசியல்
ஆனால் இந்த சம்பவம் இதோடு முடிய வில்லை. இதை பற்றி பேசிய பாஜக கட்சியை சேர்ந்த ராஜீவ் ஜாஸ்ரோட்டியா, இது சிறுமியின் குடும்ப விஷயம் என்றார்.
குற்றவாளி களை கைது செய்வதை எதிர்த்து ஹிந்து அமைப்புகள் ஊர்வலம் நடத்தியது.
இதில் இரண்டு பாஜக எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டு குற்ற வாளிக்கு ஆதரவாக கோஷ மிட்டனர்.
பிரதமர் மோடி இது பற்றி ஒருவார்த்தை கூட பேச வில்லை, ஐபிஎல் போட்டி க்காக ராஜிவ் சுக்லாவை சந்தித்த பாஜக எம்பிக்கள் எங்கே இருக்கி றார்கள் என்று கூட தெரிய வில்லை.
கடைசியில்
எல்லாம் முடிந்த பின்பும் பெரிய பிரச்சனை தொடங்கியது. சிறுமியின் உறவின ர்கள் அவர்களு க்கு சொந்தமான பகுதியில் சிறுமியின் உடலை எரிக்க முடிவு செய்துள்ளனர்.
ஆனால் அங்கு வந்த ஹிந்துத்துவா அமைப்பினர், ஆசிஃபாவின் உடலை அந்த பகுதியில் எரித்தால் எல்லோரை யும் கொலை செய்வோம் என்று மிரட்டி இருக் கிறார்கள்.
இதனால் அந்த சிறுமியின் உடலை 7 கிமீ தூரம் கொண்டு சென்று வேறு கிராமத்தில் எரித்து இருக்கி றார்கள்.
Thanks for Your Comments