13 முதல் 14 பில்லியன் ஆண்டு களுக்கு முன்னர் நடைபெற்ற காஸ்மிக் வெடிப்பு காரண மாக இந்த பேரண்டம் உருவானது.
இதனை பெருவெடிப்புக் கொள்கை (Big Bang Theory) என்பர். இப்பேரண்டம் உருவான விதத்தினை பற்றிய
மேலும் பல தவல்களை பெற நியூட்ரினோ கதிர்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பது விஞ்ஞானி களின் நிலைப்பாடு.
நியூட்ரினோ ஆய்வு மூலம் துகள் இயற்பிய லில் (Particle Physics) மாபெரும் புரட்சி ஏற்படும் என்று சொல்லப் படுகிறது. குறிப்பாக ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாடு முற்றிலும் மாறுபடும்.
அணுவின் ஓர் அங்கமான எலெக்ட்ரான் துகளுடன் இயற்கை யாகவே இரண்டு துகள்கள் உள்ளன.
அவை மியூவான் மற்றும் டாவ். இந்த மூன்று துகள் களுக்கு இணையாக மூன்று நியூட்ரினோ துகள்கள் இருக்கும்.
அவற்றிற்கு எலெக்ட்ரான் நியூட்ரினோ, மியூனான் நியூட்ரினோ, டாவ் நியூட்ரினோ என்று பெயர்.
நியூட்ரினோ துகளானது எந்தப் பொரு ளுடனும் வினை புரியாத மின்காந்த சக்தியற்ற ஒரு துகள். பேரண்டம் உருவான காலத்திலேயே நியூட்ரி னோக்கள் உருவாகி விட்டன.
Thanks for Your Comments