நிர்மலாதேவி யார் காரில் சென்றார்?

கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில் தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலா தேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. 
நிர்மலாதேவி யார் காரில் சென்றார்?
புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்து கொண்டால் தான், அசோசியேட் பேராசிரியர் பதவிக்கான தகுதியைப் பெற முடியும். இந்தப் பயிற்சிக்கு வருபவர்கள் தங்குவதற்கு, சாதாரண அறைகளைத் தான் விடுதியில் ஒதுக்குவார்கள். 

நிர்மலா தேவிக்கு ஸ்பெஷலாக ஏ.சி அறை ஒதுக்கி யுள்ளார்கள். ஒரு முறை இவர் விடுதியில் தங்கியிருந்த போது, இரவில் காரில் வந்த ஒருவர் இவரை ஏற்றிச் சென்று அதிகாலையில் திரும்பக் கூட்டி வந்து விட்டுள்ளார். 

அது யாருடைய கார், கூட்டிச் சென்றது யார் என்ப தெல்லாம் மர்மமாக உள்ளது. பல ஆண்டு களாகவே நிர்மலா தேவி மாதிரியான வர்களின் நடமாட்டம் பல்கலைக் கழகத்தில் இருந்து வருகிறது. 

இங்குள்ள விருந்தினர் மாளிகையில், பல நாள்கள் இரவு முழுவதும் கொண்டாட்டம் நடக்கும். 

உயர் கல்வித் துறை அதிகாரி களும், ஆளும் கட்சிப் பிரமுகர்களும் கூட இங்கு வந்து செல்வார்கள் என்று குமுறு கிறார்கள் மதுரை காமராசர் பல்கலை க்கழக ஊழியர்கள்.
இருட்டிய பின்பு தான் கைதாவேன்!

பூட்டை உடைத்து நிர்மலா தேவியை கைதுசெய்யப் போகிறோம்... கொஞ்சம் தள்ளி நில்லுங்கள் என்று வீட்டு வாசலில் இருந்த செய்தியாளர் களைப் போகச் சொல்லி விட்டு, 

மிகவும் பாதுகாப்பாக அவரை ஏப்ரல் 16-ம் தேதி மாலை 7 மணிக்கு அருப்புக் கோட்டை போலீஸ் கைது செய்து அழைத்துச் சென்றது. 

அப்போதே தெரிந்து விட்டது, மேலிட உத்தரவு களைக் கேட்டுத் தான் இப்படிச் செய்கிறார்கள் என்பது. இருட்டிய பின்பு தான் கைதாவேன் என்று நிர்மலா தேவி சொன்னதால், அவர் விருப்பப் படியே அழைத்துச் சென்றனர். 

மதுரை ரோடு, திருச்சுழி ரோடு எனச் சுற்றி விட்டு அரை மணி நேரம் கழித்துத் தான் காவல் நிலைய த்துக்குக் கூட்டி வந்தார்கள். ஏப்ரல் 17-ம் தேதி மதியத்துடன் விசாரணை முடிந்து விட்டது. 

ஆனாலும், மாலை 6 மணிக்கு சென்னையில் கவர்னர் பிரஸ்மீட் ஆரம்பித்த பிறகுதான், விருதுநகர் நீதிமன்ற த்துக்கு நிர்மலா தேவியை அழைத்துச் சென்றனர். 

அது வரை, மகளிர் காவல் நிலையத்தின் கதவைப் பூட்டி வைத்துக் கொண்டு, ‘விசாரணை நடக்கிறது’ என்றே சொல்லிக் கொண்டிருந்தனர்.

மூன்று செல்போன்கள், ஐந்து சிம் கார்டுகள்!
நிர்மலாதேவி யார் காரில் சென்றார்?
நிர்மலா தேவியிடமிருந்து மூன்று செல்போன்களைக் காவல்துறை கைப்பற்றியது. அவற்றிலிருந்த ஐந்து சிம் கார்டுகளும் கவனமாக எடுக்கப் பட்டன. 

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மூன்று செல்போன்களில் காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர், பேராசிரியர்கள், கல்வித்துறை முக்கியப் புள்ளிகள் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும், மாணவிகள் பலரின் புகைப் படங்களும் இருந்துள்ளன.

‘‘வாங்க மேடம்... போங்க மேடம்... சாப்பிடுங்க மேடம்...’’ என ஏட்டு முதல் ஏ.டி.எஸ்.பி வரை நிர்மலா தேவியை மிகவும் மரியாதை யாகவே நடத்தினர். 

பல்கலைக்கழக அதிகாரிகள், கவர்னர் அலுவலக ஆட்கள் ஆகியோருடன் எப்படித் தொடர்பு ஏற்பட்டது என்பதைப் பற்றி விசாரணையின் போது தயக்கமின்றி அவர் கூறியிருக்கிறார். 

கணவருடன் சென்னையில் வசித்து வந்த இவர், கணவர் வெளிநாடு சென்றதும், அருப்புக் கோட்டை தேவாங்கர் கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். 

கல்லூரி, பல்கலைக்கழக வட்டாரங்களில் பல நண்பர்களுடன் பழகியி ருக்கிறார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கணவரும் பிள்ளைகளும் இவரை விட்டுப் பிரிந்து சென்றுள்ளனர். 

பல்கலைக் கழகத்தில் நடைபெற வேண்டிய அலுவலகப் பணிகளுக்கு இவரையே தேவாங்கர் கல்லூரி நிர்வாகம் அனுப்பி யுள்ளது. 

கல்லூரிக்கு ஆய்வுக்கு வருகிற உயர் கல்வித்துறை அதிகாரிகளை வரவேற்று கவனிக்கும் பொறுப்பும் இவரிடம் ஒப்படைக் கப்படுமாம்.
அதன் நீட்சி தான், கவர்னர் அலுவலக ஆட்களுடன் தொடர்பு வரை சென்றுள்ளது. விவகாரமான இந்த ஆடியோவை வைத்துக் கொண்டு, கோடிக் கணக்கில் அவரிடம் சிலர் பேரம் பேசியுள்ளனர். 

பணம் தர முடியாது என இவர் மறுத்துள்ளார். இந்த விவரங்கள் அனைத்தை யும் விசாரணையில் நிர்மலா தேவி கூறியிருக்கிறார்.

நீதிமன்ற த்துக்குக் கூட்டிச் செல்வதற்கு முன்பாக, நிர்மலா தேவியின் கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியைக் கழற்றி விட்டு, மஞ்சள் கயிற்றைக் கட்டிக் கொள்ளுமாறு போலீஸார் கூறி யுள்ளனர். 

அப்போது, அவர் அழுதுள்ளார். மீடியாக்கள் அவரைப் படம் எடுத்து விடாமல் போலீஸார் பாதுகாத்தனர். நிர்மலா தேவியை வாகனத்தில் வைத்து அந்த வளாகத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டி ருந்தார்கள்.

துணைவேந்தர் பதற்றம்!
நிர்மலா தேவி விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி யதும், ஏப்ரல் 14-ம் தேதி டெல்லிக்குக் கிளம்பி சென்று விட்டார் காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் செல்லத்துரை. 

இவருக்குத் துணைவேந்தர் பதவியை வாங்கிக் கொடுத்த வர்களில் ஒருவர் டெல்லியில் இருக்கிறார். அவரைச் சந்திக்கவே இவர் அங்கு சென்ற தாகச் சொல்லப் பட்டது. 

டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை இவர் சந்தித் துள்ளார். 

நிர்மலா தேவி விவகாரத்தில் ஏப்ரல் 16-ம் தேதி அருப்புக் கோட்டை யில் வழக்குப் பதிவு செய்யப் பட்டதும், ஐந்து பேர் கொண்ட விசாரணை கமிட்டி அமைக்கப் பட்டதாக டெல்லியில் இருந்தபடி கூறினார் செல்லத்துரை. 

ஆனால், அந்த கமிட்டியை கவர்னர் கலைத்து விட்டார். பதறியபடி சென்னை வந்த செல்லத்துரை, கவர்னர் மாளிகை யிலேயே காத்துக் கிடந்தார். கவர்னரின் பிரஸ் மீட்டிலும் உடன் இருந்தார். 

இதற்கிடையே, காமராசர் பல்கலைக் கழகப் பதிவாளர் சின்னை யாவும், சில ஃபைல்க ளுடன் ராஜ்பவனுக்கு அழைக்கப் பட்டார்.

எஸ்கேப் ஆன நண்பர்கள்!
நிர்மலாதேவி யார் காரில் சென்றார்?
நிர்மலா தேவியுடன் பிஹெச்.டி ஆய்வு மேற்கொண்ட பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர்களான கருப்பசாமி, முருகன் ஆகியோர் தான் அவருக்கு நெருக்கமாக இருந்ததாகச் சொல்லப் படுகிறது. 

ஆரம்பத்தில் இவர்கள் மூலம் தான் பல்கலைக்கழக விடைத்தாள் திருத்தும் பணி நிர்மலா தேவிக்குக் கிடைத் துள்ளது. அதன் பிறகு நிர்மலா தேவி நேரடியாகப் பெரிய இடங்களில் தொடர்பு களை உருவாக்கிக் கொண்டார். 

நிர்மலாதேவியை ஒரு கருவி யாகப் பயன் படுத்தியவர்கள் பெரிய புள்ளிகள். கருப்பசாமியும், முருகனும் தங்கள் செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு எஸ்கேப் ஆகி விட்டார்கள். 

நிர்மலா தேவி ஆடியோவில் குறிப்பிடும் பேராசிரியர் நாகராஜ் என்பவரும் விடுப்பில் சென்று விட்டதாக தேவாங்கர் கல்லூரி நிர்வாகத்தினர் கூறு கிறார்கள்.
பல்கலைக்கழக விடுதியில்!

தொலை நிலைக்கல்வி விடைத்தாள் திருத்தும் பணிக்கு பிப்ரவரி மாதம் வந்த நிர்மலா தேவி, மூன்று நாள்கள் பல்கலைக் கழக விடுதியில் தங்கி யுள்ளார். 

அதற்குப் பின் மார்ச் 9-ம் தேதி புத்தாக்கப் பயிற்சிக்கு வந்த போது, விடுதியில் தங்கியி ருக்கிறார். அப்போது தான், அவர்மீது மாணவிகள் புகார் தெரிவித்  துள்ளனர். 

அதோடு அவரைப் பயிற்சி யிலிருந்து விடுவிக்கும் படி தேவாங்கர் கல்லூரி, பல்கலைக் கழகத்துக்குக் கடிதம் அனுப்பி யுள்ளது. மதுரையி லிருந்து மார்ச் 21-ம் தேதி கல்லூரிக்கு வந்த நிர்மலா தேவியை, கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்துள்ளது. 

அதற்குப் பின்னும் அவர் பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ளார். பலரையும் அலுவல் நேரத்தில் சந்தித்துள்ளார். 

சஸ்பெண்டு செய்யப்பட்ட ஒருவர், பல்கலைக்கழக விடுதியில் எந்த அடிப்படை யில் தங்கி யிருந்தார் என்று தெரிய வில்லை. இது பல்கலைக் கழகத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

கொந்தளிக்கும் ஆசிரியர்கள்!

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் உள்ள அனைத்துச் சங்கங்களும் இணைந்து, கூட்டு நடவடிக்கைக் குழு ஒன்றை ஏற்படுத்தி யுள்ளனர். 

அவர்கள், ஏப்ரல் 17-ம் தேதி பல்கலைக் கழக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த புவனேஸ்வரன், சதாசிவம் ஆகியோரிடம் பேசினோம்.

கல்வித் தளத்தில் புகழ்பெற்று விளங்கிய இந்தப் பல்கலைக் கழகம், கடந்த சில வருடங்களாக மிகவும் பாழ்பட்டு வருகிறது. ஆசிரியர் களுக்கும் மாணவர் களுக்கும் இடையேயான மரியாதையைச் சிலர் கெடுத்து விட்டனர்.
நிர்மலா தேவி போன்றவர்களால் ஒட்டு மொத்த ஆசிரியர் இனத்துக்கும் கெட்ட பெயர். நிர்மலாதேவி யார் யாருடன் தொடர்பில் இருந்தார், 

அவரை இது போன்று இயங்க வைத்தவர்கள் யார் என்பதை யெல்லாம் கண்டுபிடிக்க வேண்டும். அவர் பல்கலைக் கழகத்துக்கு அடிக்கடி வந்ததாகச் செய்திகள் வருகின்றன. 

சாதாரணமாக யாரும் பல்கலைக் கழக வளாகத்து க்குள் வர முடியாது. செக்யூரிட்டி கண்காணிப்பு உண்டு. அனைத்துப் பகுதிகளி லும் சிசிடிவி கேமராக்கள் உள்ளன.

கடந்த வருடம் ஒரு பேராசிரியர் மீது கொலை முயற்சி நடந்த பிறகு, உள்ளே வருகிற அனைத்து வாகனங் களின் விவரங் களும் பதிவு செய்யப் படுகின்றன. 

அந்தப் பதிவுகளை ஆய்வுசெய்ய வேண்டும். நிர்மலா தேவி இங்கு வந்த தேதிகளை வைத்து கண்காணிப்பு கேமராக் களை ஆராய வேண்டும். 

கல்லூரியில் தொடங்கி கவர்னர் வரை தெரியும் என்று சொல்கிற இவரிடம், நேர்மை யான விசாரணை நடத்தப்பட வேண்டும். 
இரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் !
இல்லை யென்றால், உயர் கல்வித் துறையில் நடைபெறுகிற பணி நியமனங் களுக்குப் பின்னால் மோசமான பின்னணிகள் இருக்கிறதோ என்று மக்கள் நினைக்கும் அபாயம் உள்ளது.

கவர்னர் பெயர் அடிபடும் ஒரு குற்றச்சாட்டை விசாரிக்க, கவர்னரே விசாரணை அதிகாரி ஒருவரை நியமித் திருப்பது வேடிக்கை யானது. 

அப்படியே நியமித் தாலும், அந்தக் குழுவில் நேர்மை யான கல்வியாளர்கள், ஓய்வுபெற்ற பெண் நீதிபதிகள் இடம் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப் பட்ட எந்த ஆசிரியரும், அலுவலரும் தப்பிக்கக் கூடாது’’ என்று எச்சரித்தனர்.

நிர்மலாதேவி கதறல்!

மதுரை மத்திய சிறையில் நிர்மலா தேவியைச் சந்தித்து விட்டு வந்த அவரின் வழக்கறிஞர் பால சுப்ரமணிய னிடம் பேசினோம். 

சிறையில் இருக்கும் நிர்மலா தேவி, தன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கூறினார். அந்த ஆடியாவில் பேசியது நான்தான். அந்த ஆடியோ எடிட் செய்து வெளியிடப் பட்டுள்ளது என்றும் கூறினார்.

அருப்புக் கோட்டையில் கல்வி நிறுவனங்கள் நடத்துவோர் இடையே உள்ள போட்டியில், தேவாங்கர் கல்லூரிக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த சிலர் இப்படிச் செய்து விட்டனர் என்றும் கூறினார் என்றார்.

வந்தார் சந்தானம்!
சி.பி.சி.ஐ.டி-க்கு வழக்கு மாற்றப்பட்ட பின்பு, எஸ்.பி மகேஸ்வரி, டி.எஸ்.பி முத்து சங்கரலிங்கம் ஆகியோர் தலைமை யிலான விசாரணைக் குழு விருது நகர் வந்து, நிர்மலா தேவி வழக்கு விவரங்களைக் குற்றப் பிரிவிடமிருந்து பெற்றுக் கொண்டது. 

சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஏப்ரல் 19-ம் தேதி காலை யிலிருந்து விசாரணையைத் தொடங்கி விட்டார்கள். அடுத்து, நிர்மலா தேவியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க உள்ளார்கள். 
எலும்பையும் விட்டு வைக்காத புற்றுநோய் !
கவர்னரால் நியமிக்கப் பட்ட விசாரணை அதிகாரியான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் சந்தானம் அதே ஏப்ரல் 19-ம் தேதி விசாரணையைத் தொடங்கினார். 

மதுரை மத்திய சிறையில் உள்ள நிர்மலா தேவியை அவரும் விசாரிக்கிறார். விடை தெரியாத பல மர்மங்களை விடுவிக்க வேண்டிய கடமை இவர்களுக்கு உள்ளது.
Tags:
Privacy and cookie settings