நிர்மலாதேவி கம்ப்யூட்டரில் படங்கள் அழிப்பா?

விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப் பட்டார்.
நிர்மலாதேவி கம்ப்யூட்டரில் படங்கள் அழிப்பா?
அவரை கோர்ட் அனுமதியுடன் 5 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று 3வது நாளாக நடந்த விசாரணையில் பல புதிய தகவல்கள் வெளி வந்ததால், விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது.

வீட்டுக்கு ‘சீல்’: அருப்புக் கோட்டை ஆத்திப் பட்டியில் உள்ள நிர்மலா தேவியின் வீட்டில், 7 பேர் கொண்ட சிபிசிஐடி குழுவினர் நேற்று முன் தினம் 6 மணி நேரம் சோதனை நடத்தினர்.

இதில், பென் டிரைவ், லேப்டாப், கம்ப்யூட்டர், சிடிக்கள் மற்றும் 3 பை நிறைய ஆவண ங்களை போலீசார் கைப்பற்றினர். வீட்டின் முன் நிறுத்தப் பட்டிருந்த நிர்மலா தேவியின் காரிலும் சோதனை செய்தனர்.

இதனை யடுத்து, அவரது வீட்டிற்கு சீல் வைத்தனர். மேலும், நிர்மலா தேவியின் கணவர் மற்றும் அவரது மாமனா ரிடமும் சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் இரவு விசாரணை நடத்தினர்.

‘ரெகவரி’ மூலம் மீட்பு: இந்நிலை யில், விருதுநகர் சிபிசிஐடி அலுவல கத்தில் எஸ்பி ராஜேஸ்வரி தலைமையில் போலீசார் நிர்மலா தேவி யிடம் நேற்று 3வது நாளாக விசாரணையை தொடர்ந்தனர்.

அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து, கேள்விகள் எழுப்பினர். ஆவணங் களில் அரசு பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளின் பெயர் இடம் பெற்றிருப் பதாக போலீசார் தெரிவித் துள்ளனர்.

நிர்மலாதேவி வீட்டில் இருந்து கைப்பற்றிய கம்ப்யூட்டரை, நேற்று ஆய்வுக்கு உட் படுத்தினர்.
அதில் படங்கள், வீடியோக்கள், தகவல்கள் அழிக்கப் பட்டிருக்கிறதா என பார்த்து, அதை நவீன ‘ரெகவரி’ சாப்ட்வேர் மூலம் மீட்டெடு க்கும் முயற்சி யில் ஈடுபட்டனர்.

நிர்மலா தேவியின் கணவர் அரசு ஒப்பந்த தாரர் என்பதால், சிபிசிஐடி அலுவலக த்திற்கு நேற்று காலை 3 ஒப்பந்த தாரர்களை வர வழைத்து விசாரணை நடத்தினர்.

நிர்மலா தேவி கணவரு க்கு அரசு ஒப்பந்தம் பெற்றுத்தர, தனது நட்பில் உள்ள அதிகாரி களை பயன் படுத்தினரா என சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.

அவரது செல்போனில் தொடர்பில் இருந்த சிலரையும் அழைத்து விசாரித் தனர். மேலும், சிலருக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.

இதனிடையே, மதுரை காமராஜர் பல்கலைக் கழக புத்தாக்க பயிற்சி இயக்குநர் கலைச் செல்வனை நேற்று முன்தினம் இரவு அழைத்து விசாரித்தனர்.

இந்த விசாரணை நேற்று மாலை வரை தொடர்ந்தது. பல்கலைக் கழகத்தில் புத்தாக்க பயிற்சியில் கலந்து கொண்ட தஞ்சாவூரை சேர்ந்த பேராசிரியை ராஜம் உள்ளிட்ட
பலரிடம் 3 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான தாக கூறப் படுகிறது.

தலை மறை வானவர் களை பிடிக்க குழு பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் தலை மறைவான மதுரை பல்கலைக் கழக உதவி பேராசிரி யர்கள் இரண்டு பேரை பிடிக்க, எஸ்பி ராஜேஸ்வரி உத்தரவின் பேரில், 4 சிபிசிஐடி போலீஸ் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன.

இந்த குழுக்கள் மதுரை, அருப்புக் கோட்டை, திருச்சுழிக்கு விரைந் துள்ளன.
Tags:
Privacy and cookie settings