மின்சார வாகனங் களை சார்ஜ் செய்து கொள்ளும் வசதியில், உலகின் முதல் எலெக்ட்ரிக் சாலையை ஸ்வீடன் நாட்டில் அறிமுகம் செய்துள்ளனர்.
2 கிலோ மீட்டர் நீளமே உள்ள இந்த சாலை, ஸ்வீடன் நாட்டின் ஆற்றல் மற்றும் கால நிலை மாற்றத்தை கணக்கில் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது.
இது போன்ற சாலையை பயன் படுத்துவது மூலம், 2030 ஆம் ஆண்டு க்குள் புதைபடிவ எரி பொருட்களின்
பயன் பாட்டை முற்றிலு மாக குறைக்க முடியும் என்று ஸ்வீடன் அரசு தெரிவித் துள்ளது.
தற்பொழுது, குறைந்த நீளத்தில் கட்டப்ப ட்டுள்ள இந்த சாலை, விரிவுப டுத்தப்பட்ட பின்னர், எலெக்ட்ரிக் வாகனங் களை சார்ஜ் செய்யவும்,
பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட் களை பயன் படுத்தும் வாகனங் களுக்கு ஒரு சிறந்த மாற்றாக வும் இருக்கும் எனவும் ஸ்வீடன் அரசு அறிவித்தது.
ஒரு கிலோ மீட்டர் எலெக்ட்ரிக் சாலையை அமைப்ப தற்கு ஒரு மில்லியன் யூரோ (சுமார் 8 கோடி) ஸ்வீடன் அரசால் செலவு செய்யப் பட்டது குறிப்பிடத் தக்கது.