காலால் மடை திறந்த காலம் மலையேறி விட்டது. தற்போது, கால் கழுவக்கூட தண்ணீர் இல்லை என்ற நிலைக்கு உலகம் போய்க் கொண்டிருக்கிறது.
தங்கத்தை விட மதிப்பு மிக்கதாகி வருகிறது தண்ணீர். முன் எப்போதையும் விட, மிகவும் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் உலக நாடுகள் முழுவதும் தலை விரித்தாடுகிறது.
பூவுலகில் தண்ணீரே இல்லாத நகரம் என்ற பூஜ்ஜிய நாளை நோக்கி வேதனை யுடன் நகர்கிறது தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம். இந்த நிலை மிகவும் கொடுமை யானது.
ஒரு தனிநபர் பயன்பாட்டுக்கு தினமும் 50 லிட்டர் தண்ணீர் மட்டுமே அங்கு வழங்கப் படுகிறது. நம் ஊரில், ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் ஊற்று வதைப் போல, அங்கு ரேஷன் கடைகளில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக் கிறார்கள்.
ஒவ்வொரு சொட்டு தண்ணீரை யும் கேப்டவுன் வாசிகள் தங்கம் போல எண்ணி எண்ணிச் செலவு செய்கிறார்கள். இங்கு நிலவும் வறட்சியைத் தேசியப் பேரிடராக அறிவித்துள்ளது தென் ஆப்பிரிக்கா அரசாங்கம்.
கேப்டவுன் நகரம், ஏப்ரல் 16-ம் தேதி பூஜ்ஜிய நாளை எட்டும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், அருகிலுள்ள கிரபவ் நகர விவசாயிகள் அதைத் தள்ளி வைத்திருக் கிறார்கள்.
கிரபவ் நகரில் உள்ள க்ரோன்லேண்ட் விவசாயிகள் அமைப்பின் நீரைப் பயன் படுத்துவோர் பிரிவு, கேப்டவுன் நகரத்துக்கு 10 ஆயிரம் மில்லியன் லிட்டர் தண்ணீர் திறந்து விட்டார்கள்.
இதைத் தொடர்ந்து, பூஜ்ஜிய நாளை ஜூன் மாதம் வரை தள்ளி வைக்கப் பட்டுள்ளது. 50 லிட்டர் தண்ணீரை எப்படி சிக்கன மாகச் செலவழிப்பது என, முகநூல் மூலமாகவும் கேப்டவுன் நகரத் தண்ணீர்ப் பிரச்னை க்கு பலரும் உதவி வருகிறார்கள்.
இந்நிலையில், கேப்டவுன் நகரில் தண்ணீரைப் பாதுகாப் பதற்காகக் காவலர் களை நியமித் துள்ளார்கள். உலக அளவில் தண்ணீரைப் பாதுகாக்கக் காவலர் களை நியமிப்பது இதுவே முதல் முறை.
கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் நிலவுவ தால், கேப்டவுன் நகரில் தண்ணீர் தொடர்பான பல்வேறு முறைகேடுகள், குற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதைத் தடுப்பதற் காகவே, இந்தக் காவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளார் கள்.
வீடுகளில் கார்களைக் கழுவுதல், தோட்டங் களுக்குப் பாசனம் செய்தல், தண்ணீரை வீணாக் குதல் போன்றவை மிகப்பெரிய குற்றச் செயல் களாக அறிவிக்கப் பட்டுள்ளன.
மேற்படி சம்பவங் களில் ஈடுபடு வோரைத் தடுக்கவும், கைது செய்து தண்டனை பெற்றுத் தருவதும் இந்தக் காவலர் களின் பணி.
அதே நேரத்தில், பொது மக்கள் மத்தியி லும் தண்ணீரை சேமிக்க வேண்டிய அவசிய த்தையும் இவர்கள் உணர்த்து வார்கள் எனத் தென்னாப்பிரிக்கா அரசு அறிவி த்துள்ளது.
நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்பார்கள். இந்தியாவி லும் தண்ணீர்த் தட்டுப்பாடு இருக்கிறது. பரவலாக இருப்ப தால், அதன் வீரியம் தெரியாமல் தண்ணீரை வீணாக்கிக் கொண்டிருக் கிறோம்.
ஒரு மனிதனின் சராசரி தண்ணீர்த் தேவை, நாளொன்று க்கு 140 லிட்டர். ஆனால் இந்தியா வில் தற்போது, தனி மனிதனு க்குக் கிடைக்கும் தண்ணீரின் சராசரி 27 லிட்டர் தான்.
இந்த சராசரி பெரும் பான்மை யானால், பூஜ்ஜிய நாள் இங்கும் நிகழலாம். எனவே, இப்போதி ருந்தே தண்ணீர் சேகரிப்பில் ஈடுபட்டால் தான் எதிர் காலத்தைச் சமாளிக்க முடியும்.
Thanks for Your Comments