திருப்பூர் அருகே வீட்டிற்குச் செல்ல பாதை ஏற்படுத்தித் தரக்கோரி மணக்கோலத்தில் இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியது.
செங்கப் பள்ளி சேனாபதி செட்டிப் பாளையத்தைச் சேர்ந்த அருணாசல த்திற்கு அரசு வழங்கிய மனைப் பட்டாவில், வீட்டிற்கு செல்லும் வழிப்பாதை எது என குறிப்பிடப்பட வில்லை.
இந்த பிரச்னையால் தனது திருமணத் திற்கே சிக்கல் ஏற்பட்டு விட்டதாக வும், வீட்டிற்கு உரிய பாதை யில்லாத தால் பலர் தனக்கு பெண் தர மறுப்ப தாகவும் பாதிக்கப் பட்டவர் வேதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக தொடரப் பட்ட வழக்கில், முறையான பாதை ஒதுக்கீடு செய்து தருமாறு நீதிமன்றம் உத்தர விட்ட போதும், அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை என்று பாதிக்கப் பட்டவர் குற்றம் சாட்டினர்.