கடந்த சில தினங்களுக்கு முன் வட மாநிலங்களில் சுமார் 130 பேரை பலி கொண்ட புழுதிப் புயல் நேற்றிரவு டெல்லி, ஹரியானா, உத்த பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை மீண்டும் தாக்கியது.
இடி மின்னலுடன் வீசிய புழுதிப் புயலால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள 13 மாநிலங் களில் மணிக்கு 50 கிலோ மீட்டரிலிருந்து 70 கிலோ மீட்டர் வரை
பலத்த காற்றுடன் புழுதிப் புயல் வீசும் என்றும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித் திருந்தது.
இந்நிலை யில், நேற்றிரவு டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங் களில் புழுதிப் புயல் வீசியது.
இடி மின்னலுடன் கன மழை பெய்தது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஆர்.கே.புரம், மோதிபாக், பிரகதி மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த புழுதிப் புயல் வீசியது.
இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு சாலைகள் புழுதிப் புயல் மண்டல மாகக் காட்சி யளித்தன. இடி மின்னலுடன் பெய்த கனமழை யாலும் பலத்த காற்றாலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
பல்வேறு இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப் பட்டிருந்தன.இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை யடுத்து டெல்லி யில் தீவிர முன் எச்சரிக்கை நடவடி க்கைகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன.
புழுதிப் புயலைத் தொடர்ந்து டெல்லி மெட்ரோ ரயில்களை குறைவான வேகத்தில் இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தி யிருந்தது.
உத்தர பிரதேச மாநிலத்தில் மீரட், நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளி லும் நேற்றிரவு பலத்த புழுதிப் புயல் வீசியது.
இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் எச்சரிக்கையை யடுத்து பல்வேறு இடங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டிற் குள்ளேயே முடங்கி யிருந்தனர்.
ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் கடும் புழுதிப் புயல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை தாக்கியது.
இதனை யடுத்து மீட்பு பணியை துரிதப்படுத்தி யுள்ள ஹரியானா அரசு சம்பந்தப் பட்ட துறை அதிகாரி களின் விடுமுறையை ரத்து செய்து உடனடியாக பணிக்குத் திரும்ப உத்தர விட்டுள்ளது.
சுமார் 130 உயிர்களை பலி கொண்ட பின்னரும் தனது கோரப் பசி நீங்காத புழுதிப் புயல் நேற்று வட மாநிலங் களை மீண்டும் ஒரு முறை அச்சுறுத்தியது.
Thanks for Your Comments