இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்ல, குறைந்தது 60,000 ரூபாய் வரை செலவு ஆகும். அமெரிக்காவின் மறுமுனையில்
உள்ள சான்ஃ பிரான்ஸிஸ்கோ போன்ற நகரங்களுக்குச் செல்ல வேண்டு மானால், 2 லட்சம் ரூபாய் வரை விமானக் கட்டணம் இருக்கும்.
அமெரிக்காவு க்குச் சுற்றுலா செல்ல இந்தியர் களுக்கு விருப்பம் இருந்தாலும், விமானக் கட்டணம் காரணமாக அங்கு செல்வதைத் தவிர்ப்ப வர்களும் உண்டு.
அப்படிப்பட்ட இந்தியர்களை டார்கெட்டாக வைத்து இந்தியச் சந்தையில் குதித்துள்ளது. ஐஸ்லாந்தின் `வாவ்' ஏர் லைன்ஸ். பெயருக்கேற்ற வகையில் விமானக் கட்டணமும் `வாவ்' ரகம் தான்.
ஆம்... டெல்லியி லிருந்து வெறும் 13,499 ரூபாயில் லாஸ் ஏஞ்சலீஸ் நகருக்குப் பறந்து விடலாம். வாவ் ஏர் லைன்ஸை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்.
2012-ம் ஆண்டு தான் ஐஸ்லாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்குலி மொகன்ஸன் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.
தற்போது ஐரோப்பா - வடஅமெரிக்கா நகரங்களுக் கிடையே 39 சேவைகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
லண்டன், பாரீஸ், சிகாகோ, லாஸ் ஏஞ்சலீஸ், டொரன்டோ, சான்ஃ பிரான்சிஸ்கோ, நியூயார்க் நகரங்களும் இதில் அடக்கம்.
தொடங்கப் பட்ட ஆறு வருடத்தில் ஐஸ்லாந்தின் அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமான `ஐஸ்லேண்ட் ஏர்' நிறுவனத்துக்கு சந்தையில் கடும் போட்டி யாளராக மாறியது வாவ் ஏர்லைன்ஸ்.
2019-ம் ஆண்டுக்குள் ஐஸ்லேண்ட் ஏர் நிறுவனத்தை வியாபார ரீதியில் ஜெயிப்பது ஸ்குலி மொகன்ஸனின் இலக்கு. வாவ் ஏர்லைன்ஸ், தன் சேவையை டிசம்பர் 5-ம் தேதி முதல் இந்தியாவில் தொடங்குகிறது.
டெல்லியி லிருந்து ஐஸ்லாந்தின் தலைநகரான Keflavik வரை பயணிக்க வேண்டும். அங்கிருந்து அடுத்த இறக்கம் அமெரிக்கா தான். இணைப்பு விமானங்கள் வழியாக குறைந்த கட்டணச் சேவை சாத்தியமாகிறது.
டெல்லி யிலிருந்து Keflavik நகருக்கு வாரத்தில் ஐந்து நாள்கள் விமான சேவை அளிக்கப்படும். இந்தியாவி லிருந்து ஐஸ்லாந்தின் Keflavik நகர் வழியாக அமெரிக்கா செல்வதே குறைந்த தூரம் என்றும் இந்த நிறுவனம் சொல்கிறது.
வாவ் பேசிக் கட்டணப் பிரிவில் உணவு, எக்ஸ்ட்ரா லக்கேஜ் களுக்குத் தனிக் கட்டணம் வசூலிக்கப் படும். வாவ் ப்ரீமியம், வாவ் ப்ளஸ், வாவ் காம்ஃபை என்ற வகைகளிலும் கட்டணம் வசூலிக்கப் படுகின்றன.
10 கிலோவுக்கு மேல் உள்ள லக்கேஜுகளுக்கு அனுமதியில்லை. பேக்குகள் 17x13x10 என்ற அளவுக்குள்தான் இருக்க வேண்டும்.
ஸ்குலி மொகன்ஸன் `இந்தியாவில் விரைவில் சந்தையைப் பிடித்து விடுவோம்'' என்று நம்பிக்கை யுடன் சொல்கிறார். `இந்தியாவி லிருந்து தினமும் 20 ஆயிரம் பேர் அமெரிக்கா செல்கின்றனர்.
80 சதவிகிதம் பேர், நேரடி விமானத்தில் செல்வதில்லை. இணைப்பு விமானங்கள் வழியாகவே செல்கின்றனர். இவர்கள் தான் எங்கள் டார்கெட் கஸ்டமர்கள்.
அன்றாடம் மாறும் எண்ணெய் விலை உள்ளிட்ட வற்றால் டிக்கெட் விலையில் சற்று மாற்றம் செய்யப்படும். அதுவும் 100 டாலர்களுக்குள் தான் இருக்கும் என்கிறார்.
வாவ் ஏர் லைன்ஸின் இணைய தளத்தைப் பார்த்தால், டிசம்பர் 7-ம் தேதி புது டெல்லி - லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்துக்கு அடிப்படை விலை 309.99 (ரூ.20,921) அமெரிக்க டாலர்கள்.
பயண நேரம் 24 மணி நேரம் 5 நிமிடம் எனக் குறிப்பிடப் பட்டிருந்தது. அதே நாளில் டெல்லியி லிருந்து லாஸ் ஏஞ்சலீஸ் நகருக்கு
எந்த விமானத்தில் கட்டணம் குறைவாக இருக்கிறது எனத் தேடினால், சைனா ஈஸ்டர்ன் ஏர் லைன்ஸ் பெயரைக் காட்டியது.
டெல்லியி லிருந்து லாஸ் ஏஞ்சலீஸ் நகருக்கு ஷாங்காய் வழியாகச் செல்லும் இந்த விமானத்தின் டிக்கெட்டின் விலை 38,875 ரூபாய்.
வாவ் ஏர் லைன்ஸில் ஜனவரி 14-ம் தேதியில், டெல்லியி லிருந்து அமெரிக்கா வின் பாஸ்டன் நகருக்குச் செல்ல 199 டாலர் தான் (ரூ.13,532 ) கட்டண மாகக் காட்டியது.
என்ன மக்களே அமெரிக்காவுக்கு ஒரு ரவுண்டு போயிட்டு வருவோமா!
Thanks for Your Comments