ஐக்கிய அரபு அமீரகத்தின் தலை நகரான துபையில் மணமகன் திருமணமான 15 நிமிடங்களில் தனது மனைவியை விவாகரத்து செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இஸ்லாமிய நாடுகளில் பெண்ணைத் திருமணம் செய்யும் இளைஞன் பெண் வீட்டாருக்கு 'மகர்' எனப்படும் திருமணப் பணம் வழங்குவது வழக்கம். அந்த வகையில்.
துபையினைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் 10000 திர்ஹாம் கொடுத்து உங்களது மகளை திருமணம் செய்து கொள்கிறேன், என்று மணமகளின் தந்தையுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
அவர்களிடையே செய்து கொள்ளப் பட்ட ஒப்பநதப்படி, ஷரியத் நீதிமன்ற அலுவலக த்தில் திருமண ஒப்பந்த பத்திரத்தில் தம்பதிகள் கையெழுத் திட்டவுடன் 5000 திர்ஹாமும்,
அந்த அலுவலகத் திலிருந்து வெளியே வந்தவுடன் மீதி 5000 திர்ஹாமும் கொடுப்பதாக ஏற்பாடு. பின்னர் அனைவரது முன்னிலை யிலும் இவர்களது திருமணம் நடை பெற்றது.
ஒப்பந்தப்படி கையெழுத் திட்டதும் முதலில் 50000 திர்ஹாமை மணமகன் தனது மாமனாரிடம் வழங்கி யுள்ளார்.
திருமணம் முடிந்த வெளியில் வந்த வுடனேயே மீதியுள்ள 5000 திர்ஹாமை தருமாறு மணமகளின் தந்தை வற்புறுத்தி யுள்ளார்.
பணம் காரிலிருப் பதாகவும் சிறிது நேரத்தில் சென்று எடுத்து தருவ தாகவும் மணமகன் கூறியுளளார்.
ஆனால் இதனை ஏற்காத மாமனார், யாரை யாவது அனுப்பி உடனே எடுத்து வந்து தருமாறு சண்டை யிட்டுளார்.
இதனால் கோபம் கொண்ட மணமகன், தனக்கு அவமானம் நேர்ந்து விட்டதாகக் கூறி, உங்களது பெண்ணுடன் வாழ விரும்பவில்லை என்று கூறி திருமணமான 15 நிமிடத் திலேயே
மூன்று முறை தலாக் சொல்லி மணமகளை விவாகரத்து செய்துள்ளார். இதன் காரணமாக அங்கே பரபரப்பு உண்டானது.
Thanks for Your Comments