அமெரிக்காவின் நியூயார்க்கில் 2 இந்தியருக்கு வாரிய பதவி !

0
அமெரிக்காவின் நியூயார்க் நகர ஆலோசகர்கள் வாரிய உறுப்பினர் களாக 2 இந்தியர்கள் நேற்று முன்தினம் நியமிக்கப் பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் 2 இந்தியருக்கு வாரிய பதவி !
நியூயார்க் நகர ஆலோசகர்கள் வாரியத்துக்கு 19 உறுப்பினர் களை நியமித்துள்ளார் மேயர் பில் டி பிளாசியோ. 

இதில் நியூயார்க் நகர ஓட்டல் சங்க தலைவர் விஜய் தண்டபாணி மற்றும் இன்சைட் வென்ச்சர்ஸ பார்ட்னர்ஸ் நிர்வாக இயக்குநர் தேவன் பரேக் ஆகிய 2 இந்தியர்கள் அடங்குவர்.

ஓட்டல் தொழிலில் சிறந்து விளங்கும் தண்டபாணி, நியூயார்க் நகரின் சிறந்த 100 சிறு பான்மையின வர்த்தக தலைவர்கள் பட்டியலில் 1998-ல் இடம் பிடித்தார்.
நியூயார்க் நகர மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் பின்தங்கிய மக்களின் 

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது ஆகிய பணிகளை ஆலோசகர்கள் வாரியம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings