கொதிக்கும் போராட்டக்குழு... துப்பாக்கிச் சூடு அறிந்த 2 பேர் !

0
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த அமைதிப் பேரணியில், போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு 10 பேர் பலியானது, மக்களிடையே கொந்தளிப்பை அதிகப்படுத்தி யிருக்கிறது.
கொதிக்கும் போராட்டக்குழு... துப்பாக்கிச் சூடு அறிந்த  2 பேர் !
வேதாந்தா குழுமத்தின் அழுத்தம் காரணமாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இது குறித்து முக்கியப் புள்ளிகளுக்கு முன் கூட்டியே தெரிவிக்கப்பட்டு விட்டது என்கின்றனர், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழுவினர்.

தூத்துக்குடி, சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்பட்டு வருகிறது. 

இந்த ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகளால் பல்வேறு நோய்களும் சுற்று ச்சூழல் பாதிப்பும் ஏற்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். 

'ஸ்டெர் லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும்' என்பதை வலியுறுத்தி, பொது மக்கள் போராட்ட த்தைத் தொடங்கினர். 
இந்தப் போராட்ட த்துக்கு, சுற்று வட்டாரத்தில் உள்ள 18 கிராம மக்களும் அரசியல் கட்சித் தலைவர் களும் ஆதரவு தெரிவித்தனர். 

பொது  மக்களின் தொடர்ச்சி யான போராட்டங் களால், கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக ஸ்டெர்லைட் ஆலை இயங்க வில்லை. 

போராட்ட த்தின் நூறாவது நாளான நேற்று, ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில், 

கலெக்டர் அலுவல முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித் திருந்தனர். இதை யடுத்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. 

பொது மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கடைகளும் தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன. நேற்று காலை 9 மணியளவில், இருபதாயிர த்துக்கும் அதிகமான மக்கள் திரண்டனர். 

தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் பகுதி அருகே வந்த போது, இரும்புத் தடுப்புகளை வைத்து அவர்களைத் தடுத்து நிறுத்தியது போலீஸ். 

தடை உத்தரவு போடப் பட்டுள்ளது. கலைந்து செல்லுங்கள் எனக் கூறி யுள்ளனர். இதைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. இந்தத் தாக்குதலில் 10 பேர் இறந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டிருக்கிறது. தமிழக அரசும், 'நீதி விசாரணை அமைக்கப்படும் என அறிவித்தி ருப்பதை பொது மக்கள் விரும்ப வில்லை. 

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப் பட்டவர்களின் உடல்களை வாங்க மறுத்து போராட்ட த்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய ஸ்டெர்லைட் போராட்டக் குழு நிர்வாகி ஒருவர், இது முன் கூட்டியே திட்ட மிட்ட சம்பவம். 

வேதாந்தா நிறுவனத்தின் ஊழியராகத் தான் கலெக்டர் வெங்கடேசன் செயல்பட்டு வருகிறார். நூறு நாள்களைக் கடந்து போராட்டம் நடந்தாலும், ஒரு நாள் கூட பொது மக்களை சந்தித்து அவர் பேச வில்லை. 

ஒரு முறை கூட மக்களிடமிருந்து அவர் மனுவை வாங்க வில்லை. மாறாக, போராட்டக் காரர்களை ஒடுக்குவதில் அதிக அக்கறை செலுத்தி வந்தார். 

தொடர்ச்சி யான போராட்டங் களால் வேதாந்தாவின் உற்பத்தி பாதிக்கப் பட்டது. போராட்டத்தை ஒடுக்கு வதற்குப் பல வகைகளில் முயன்றனர். 

ஒரு முறை நடிகர் கமல் பேசும் போது, பொது மக்களுக்கு நிவாரணம் அளிக்க அவர்கள் விரும்ப வில்லை. ஆனால், அரசியல்வாதி களுக்கு 5 கோடி ரூபாய் வரை கொடுப்ப தற்குத் தயாராக இருப்பதாகக் கேள்விப் பட்டேன் என்றார். 

இது தான் நடந்து வருகிறது. அரசியல் கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகி களுக்கு ஆலைக்குள் ஒப்பந்தம் வழங்குவது, மாதம் தோறும் மாமூல் கொடுப்பது எனப் பல்வேறு உபாயங் களைக் கையாண்டு வருகிறது ஸ்டெர்லைட் என விவரித்தவர்,

போராட்டத்தை நீர்த்துப் போக வைப்பதற்காக, கூட்டமைப்பையே இரண்டாகப் பிரித்து விட்டது மாவட்ட நிர்வாகம். 
கொதிக்கும் போராட்டக்குழு... துப்பாக்கிச் சூடு அறிந்த  2 பேர் !
போராட்டக் களத்தில் தீவிரமாக இருப்ப தாகக் காட்டிக் கொள்ளும் பெண் ஒருவர் தலைமையில், வியாபாரி களை ஒருங்கிணைத்து போலீஸ் மைதானம் ஒன்றுக்கு அனுப்பி வைத்து விட்டனர். 

நேற்று முன்தினம் இது குறித்து வியாபாரிகள் சிலரிடம் பேசிய மாவட்ட நிர்வாக த்தில் உள்ளவர்கள், பேரணியில் வன்முறை வெடிக்கும். கட்டாயம் துப்பாக்கிச் சூடு நடக்கும். நீங்கள் எல்லாம் வியாபாரிகள். 

இந்த விவகாரத்தில் ஒதுங்கி நில்லுங்கள். நீங்கள் பாதிக்கப் பட்டால், நாங்கள் பொறுப்பல்ல' எனக் கூறி விட்டனர். இதைப் புரிந்து கொண்டு, கடை அடைப்பு எனக் கூறிக் கொண்டு அவர்களும் மைதான த்துக்குச் சென்று விட்டனர்.

கலெக்டர், எஸ்.பி கூட்டிய கூட்டத்து க்குச் சென்று கையெழுத்தும் போட்டு விட்டு வந்தார் அந்தப் பெண்மணி. அவரை கூட்டமைப்பு க்குள் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. 

அதே போல, எதிர்க் கட்சியைச் சேர்ந்த முக்கிய பெண்மணி ஒருவரு க்கும், துப்பாக்கிச் சூடு விவகாரம் முன் கூட்டியே தெரிய வந்திருக்கிறது. 
தன்னுடைய தலைமையில் சிலரைத் திரட்டி, ஸ்டெர் லைட்டுக்கு எதிராகக் கோஷம் போட்டார். அவரையும், அவரோடு கோஷம் போட்ட சிலரையும் தனியார் மண்டபம் ஒன்றில் அடைத்து விட்டனர். 

இதெல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப் பட்டவை. அதனால் தான், பேரணியில் கலந்து கொள்ளாமல், அந்தப் பெண் மணிகள் இருவரும் விலகிக் கொண்டனர்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings