கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும் பான்மை இல்லாத சூழ்நிலையில்,
அதிக தொதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படை யில் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இதனை அடுத்து எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். அவர் 15 நாட்களில் பெரும் பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் வஜுபாய் வாலா உத்தர விட்டார்.
ஆனால் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மே 19ம் தேதி மாலை 4 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.
இந்த நிலையில் உணவு இடை வேளைக்கு பின் இன்று 3.30 மணியளவில் மீண்டும் கூடிய சட்டப் பேரவையில் எடியூரப்பா பேசினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருந்த நிலையில் தொடர்ந்து உருக்கமுடன் பேசிய அவர், கர்நாடக முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என கூறினார்.
எடியூரப்பா பதவி விலகிய நிலையில், ஆளுநருடன் குமாரசாமி சந்தித்து பேசினார்.
அவரை ஆட்சி யமைக்க ஆளுநர் விடுத்த அழைப்பினை அடுத்து வருகிற 21ந்தேதி குமாரசாமி பதவியேற் கிறார்.
மேலும், இது குறித்து குமாரசாமி கூறிய தாவது, “கர்நாடகா வில் ஆட்சி அமைக்க ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார்” என்று தெரிவித்தார்.
பின்னா், பெரும் பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி யுள்ளது.
இந்நிலையில் “மே 21ஆம் தேதி மதியம் முதல்வராக பதவியேற்கும் விழாவில் சோனியா,
ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி ஆகியோரு க்கும் அழைப்பு விடுத்துள்ளேன்” என குமாரசாமி கூறினார்.
Thanks for Your Comments