22 ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் எங்கே தெரியுமா?

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் நீண்ட 22 ஆண்டு களுக்குப் பிறகு திருமண நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் டோல்பூர் மாவட்டத்தில் ராஜ்காட் என்ற கிராமத்தில் 350 பேர் வசிக்கின்றனர். இந்த கிராமம் சம்பல் ஆற்றின் அருகே அமைந்துள்ளது.


இப்பகுதி யிலேயே நீண்ட 22 ஆண்டு களுக்கு பின்னர் திருமண நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றுள்ளது.

இங்கு சாலை வசதி, மின்சாரம், குடிநீர் வசதி போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 

அங்குள்ள ஆரம்பப் பள்ளியில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே மாணவர்கள் பயில் கின்றனர்.

மாலை வேளையில் சூரியன் மறைந்து விட்டால், அதன் பிறகு மக்கள் இருட்டில் தான் இருக்க வேண்டும். சம்பல் ஆற்று நீரைத் தான் மக்கள் குடிநீராகப் பயன் படுத்தி வருகின்றனர். சுத்த மான குடிநீர் வசதி கிடையாது.

அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் இந்தக் கிராமத்தி லிருந்து பெண் எடுப்பது மில்லை, கொடுப்பது மில்லை.


இந்தக் கிராமத்தில் கடைசியாக 1996ஆம் ஆண்டுதான் திருமணம் நடந்தது. கிட்டத் தட்ட இரண்டு தசாப்தங் களாக எந்தவொரு திருமண நிகழ்ச்சி யும் நடைபெற வில்லை.

இந்நிலையில், இந்த வாரத்தில் 23 வயதான பவன் குமார் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

22 ஆண்டு களுக்குப் பிறகு அக்கிராம மக்கள் கடந்த வாரம் குறித்த திருமண நிகழ்ச்சியைக் கண்டு களித் துள்ளனர்.

டோல்பூரைச் சேர்ந்த அஸ்வனி பராசர் என்பவர் ஜெய்ப்பூர் சவாய்மேன் சிங் அரசு மருத்துவக் கல்லூரி யில் இறுதி யாண்டு படிக்கிறார்.

அவர் தனது கிராமத்தின் நிலை குறித்தும், கிராமத்து இளைஞர்கள் வருடக் கணக்கில் திருமண மாகாமல் தவித்து வருவது குறித்தும், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பதிவிட்டி ருந்தார்.


தனது கிராமத்து க்கு அரசு சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டு மெனக் கோரி உயர் நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings