சவுதி இளவரசர் சுல்தான் பின் சல்மான் ரூ. 330 கோடி ரூபாய் வரதட்சணையாகக் கொடுத்து இளம் பெண் ஒருவரைத் திருமணம் செய்துள்ள தாக தகவல்கள் வெளியாகி யுள்ளது.
சவூதி அரேபியா இளவரசரான சுல்தான் பின் சல்மானு க்கு தற்போது 68 வயது ஆகிறது. சமீபத்தில் இவருக்கு திருமணம் நடை பெற்றது.
இத்திருமண நிகழ்ச்சியின் போது 30 குதிரை வண்டிகளில் பரிசுப் பொருட்களும், சொகுசுப் பேருந்து ஒன்றில் இருந்து 30 பெட்டி களும் இறக்கப் பட்டன.
அதில் இருந்த வைர நகைகளும், பரிசு பொருட்களும் மணப் பெண்ணின் குடும்பத் தாருக்கு வழங்கப் பட்டது. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.
அதில், மணப்பெண் வெள்ளை நிற ஆடையில் அழகாக காட்சி அளிக்கிறார். மணப்பெண் சவுதியைச் சேர்ந்தவர் எனச் சொல்லப் படுகிறது.
25 வயதாகும் மணப் பெண்ணிற்கு 50 மில்லியன் டாலர் களை சுல்தான் வரதட்சணை யாகக் கொடுத்த தாகக் கூறப்படு கிறது. இந்நிய மதிப்பில் இது ரூ. 330 கோடி ஆகும்.