ஸ்டெர் லைட்டுக்கு எதிரான தீவிர போராட்டம் 3-வது நாளை எட்டியுள்ள நிலையில், இன்றும் சில அசம்பாவித சம்பவங்கள் நடை பெற்றன. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.
நேற்று முன்தினம் நடந்த 100-வது நாள் போராட்டத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், அகில இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது.
நேற்று முன்தினம் தொடங்கிய போராட்டம், 3-வது நாளை எட்டியுள்ளது. ஆலையை மூடும் வரை எங்களது போராட்டம் தொடரும் என போராட்டக் காரர்கள் அறிவித் துள்ளனர்.
இதனால், போலீஸுக்கும் பொது மக்களுக்கும் இடையே ஆங்காங்கே மோதல் உருவாகும் சூழ்நிலை இருப்பதால், அங்கு தொடர் பதற்றம் நிலவி வருகிறது.
அவர்களைக் கட்டுப் படுத்த அதிகளவில் போலீஸார் குவிக்கப் பட்டு வருகின்றனர். குறிப்பாக, தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் நேற்று நடந்த கலவரத் துக்கு இடையே, இன்று கமாண்டோ படைகள் குவிக்கப் பட்டுள்ளன.
இந்தப் பகுதியில், இன்றும் சில அசம்பா விதங்கள் நிகழ்ந்தன. தூத்துக்குடி, பிரையன்ட் நகரில் உள்ள டாஸ்மாக் இடிக்கப் பட்டதுடன், அண்ணா நகர் மெயின் ரோடு பகுதியில் ஒரு பைக் எரிக்கப் பட்டது.
அப்போது, அந்தப் பகுயில் கல்வீச்சு தாக்குதலும் நடை பெற்றது. இதைத் தொடர்ந்து, முத்தம்மாள் காலனியில் உள்ள பணி மனைக்குப் பின்புறம் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இது நடந்து கொண்டிருக்கும் போதே, தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் முத்தையா புரம் காவல் நிலையத்தின் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
மதியம் 2.30 மணியளவில், அண்ணா நகர் பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவிவந்த நிலையில்,
அங்கு தமிழக அரசின் சிறப்புப் பயிற்சி பெற்ற அதிரடி விரைவுப் படையினர் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் அணி வகுப்பு நடத்தினர்.
இதற்கிடையே, பாதிக்கப் பட்டவர்களை டி.டி.வி. தினகரன் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் இன்று சந்தித்து ஆறுதல் கூறினர்.
Thanks for Your Comments