எஸ்.எஸ்.எல்.சி மறு கூட்டலுக்கு 3 மாவட்டங்களுக்கு கால அவகாசம் !

0
ஸ்டெர்லைட் போராட்டத்தின் எதிரொலியாக, நாளை முதல் 3 நாள்கள் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக் கழகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப் பட்டுள்ளன.
எஸ்.எஸ்.எல்.சி மறு கூட்டலுக்கு 3 மாவட்டங்களுக்கு கால அவகாசம் !
அதே போல தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பத்தாம் வகுப்பு மறு கூட்டலு க்காக விண்ணப் பிக்கவும் காலஅவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி நடந்த போராட்ட த்தில், போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

இதில், அப்பாவி பொது மக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுப் பெற்று வருகின்றன.

இந்த நிலை யில், மே 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த பொறியியல் கல்லூரி தேர்வுகளை ஒத்தி வைப்பதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. 

இந்தத் தேர்வுகள், ஜூன் 5, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடை பெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
அதே போல, வன்முறை யால் இணையதளச் சேவை முடக்கப் பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி 

மற்றும் கன்னியா குமரி மாவட்ட மாணவர்கள், பத்தாம் வகுப்பு மறு கூட்டலுக்கு வின்ணப்பிக்க, கால அவகாசத்தை நீட்டித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகம் உத்தர விட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள செய்திக் குறிப்பில், `தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 23-ம் தேதி வெளியாகின. 

இதில், மறு கூட்டலுக்கு விண்ணப் பிக்கும் மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள், இன்று (24.5.2018) முதல் 26.5.2018 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டிருந்தது.

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியா குமரி மாவட்டங் களில் இணைய தளச் சேவை நிறுத்தம் மற்றும் 144 தடை உத்தரவு ஆகிய வற்றால், மேற்படி 3 மாவட்டங் களிலிருந்தும் 
எஸ்.எஸ்.எல்.சி மறு கூட்டலுக்கு 3 மாவட்டங்களுக்கு கால அவகாசம் !
பத்தாம் வகுப்பு மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், தேர்வர்கள் மேற்படி 3 மாவட்டங் களிலும் இயல்பு நிலை திரும்பிய அடுத்த நாளிலிருந்து 

3 தினங்களுக்குள் விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்படும் என்றும், உரிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings