இந்தியாவின் ஆதார் தொழில் நுட்பத்தால், தனிமனித சுதந்திரம் பாதிக்கப் படாது என்றும் இதனை இதர நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அதிபரும், கொடை யாளருமான பில்கேட்ஸ் உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களுள் முதன்மை யானவராகத் திகழ்ந்தவர் ஆவார்.
இந்தியாவின் ஆதார் தொழில் நுட்பமானது உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள முறையாக விளங்கி வருகிறது. இதில் 100 கோடிக்கும் மேலான மக்கள் பதிவு செய்துள்ளனர்.
இதனால் கிடைக்கும் பலன்கள் என்பது சொல் லிடங்காத வகையில் உள்ளதாக தெரிவித்துள்ள பில்கேட்ஸ், இதனை உலக நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளார்.
இதன் மூலம் அந்நாடுகளின் பொருளாதாரம் மேம்படு வதுடன், மக்களின் வாழ்வாதாரம் உயரும் என்றும் குறிப்பிட் டுள்ளார்.
இன்ஃபோஸிஸ் நிறுவ னர்களுள் ஒருவரான நந்தன் நிகேனி ஆதாருக் கான விதையை விதைத் தவராக போற்றப் படுகிறார் என்று பில்கேட்ஸ் தெரிவித் துள்ளார்.
பில்கேட்ஸின் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் ஆதார் முறையை உலக நாடுகளில் அமல்படுத்த உலக வங்கிக்கு உதவி யுள்ளதாகவும், ஆதார் அமல்படுத்த உதவிகோரி இந்தியாவை பல நாடுகளும் அனுகி யிருப்பதாக தெரிய வந்துள்ள தாகவும் அவர் கூறினார்.
ஆதார் திட்டம் என்பது தற்போதைய இந்தியப் பிரதமரான மோடியின் ஆட்சிக்கு முன்ன தாகவே தொடங்கப் பட்டது என்றாலும், இதனை ஆதரித்து அமல் படுத்திய பிரதமர் மோடிக்கே அதன் பெருமை சென்று சேரும் என்றும் அவர் கூறினார்.
கடந்த 2016ஆம் ஆண்டு நிதி ஆயோக் சார்பில் தொழில் நுட்ப உருமாற்றம் குறித்த கருத் தரங்கில் பங்கேற்றுப் பேசிய பில்கேட்ஸ் ஆதார் என்பது
எந்த ஒரு அரசாங்கமும் செயல் படுத்திடாத ஒரு திட்டம் என்றும் வல்லரசு நாடுகள் கூட இப்படி ஒன்றை அமல் படுத்திய தில்லை என்று குறிப்பிட்டு பேசி யிருந்தார்.
ஜனவரி 2009ஆம் ஆண்டு இந்திய அரசாங் கத்தால், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தொடங்கப் பட்டு அதன் மூலம் ஆதார் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.