பிரித்தானியாவில் உள்ள விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த இரு விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
Stansted விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.15 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.
தற்காலிக நிறுத்து மிடத்தில் Primera நிறுவனத்தின் விமானமும், Ryanair நிறுவன த்தின் விமானமும் ஒரே நேரத்தில் புறப்பட்டன.
அப்போது Primera விமானத்தின் இறக்கை, Ryanair விமானத்தின் பின் பகுதியுடன் சொருகிகொண்டு மோதியுள்ளது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்பட வில்லை.
இதை யடுத்து இரண்டு விமானங் களும் லண்டன் ஸ்டான்ஸ்டட் விமான போக்கு வரத்துக் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன.
பின்னர் தொழில் நுட்ப பொறி யாளர்கள் Ryanair விமானத்தை சோதனை செய்தார்கள்.
தாமதத்தை தடுக்க விமானங் களில் உள்ள பயணிகள் வேறு விமானத்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
Thanks for Your Comments