திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கடந்த ஒன்பது வருடங்களாக மக்களுக்கு ஆசீர்வாதம் செய்து வந்த யானை தான் மசினி.
ஆறு மாத குட்டியாக இருக்கும் போது முதுமலை கார்குடி பகுதியில் தனது தாயை பிரிந்த நிலையில் மீட்கப் பட்டது.
எங்கு செல்வது, என்று தெரியாது சுற்றும் முற்றும் சுற்றித் திரிந்த குட்டி யானை அப்பகுதியில் இருக்கும் மசினி அம்மன் கோயில் அருகே பரிதாபமாக அமர்ந்திருந்தது.
இதைக் கண்ட ஊர் மக்கள், வனத்துறை யினருக்குத் தகவல் கொடுத்தனர். பின்பு, குட்டி யானை மீட்கப் பட்டது. மசினி அம்மன் கோயிலில் கிடைத்ததால் இதற்கு "மசினி" என்று பெயர் சூட்டப் பட்டது.
பின்பு, சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு, கடந்த ஒன்பது ஆண்டு களாக மக்களுக்கு ஆன்மிக சேவையாற்றி வருகின்றது.
40 வயதாகும் கஜேந்திரன் பெண் யானை மசினியை பராமரித்து வரும் பாகனாக இருந்து வந்தார். இந்நிலை யில், இன்று காலை பெண் யானையான மசினிக்கு திடீரென மதம் பிடித்தது.
மசினி அங்கும் இங்குமாக கோயிலை சுற்றிச் சுற்றி வந்துள்ளது. அதைக் கண்ட பாகன் மசினியை மிரட்டி ஓரிடத்தில் அமரும் படி கூறி யுள்ளார்.
ஆனால் கட்டுக்குள் அடங்காத யானை கோபம் வந்து பாகனை மிதித்துக் கொன்றுள்ளது. சம்பவ இடத்தி லேயே பாகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கட்டுக்குள் அடங்காத யானையைக் கண்டு கோயிலுக்குள் இருந்த பக்தர்கள் கோயிலை விட்டு அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். வேறு வழி யில்லாமல் யானையை அடக்க சமயபுரம் மாரியம்மன் கோயில் நடை சார்த்தப் பட்டது.
பின்பு, வனத்துறை யினர் சம்பவ இடத்திற்கு வந்து, யானையை அடக்கப் பயிற்சி பெற்ற பாகன்கள் 6 பேர் இணைந்து யானைக்கு உத்தரவிட்டு அதனை ஒரு வழியாக ஒரு மணி நேரப் போராட்டத்திற்கு பின்பு மயக்க ஊசி செலுத்தி மசினியை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மதம் பிடித்ததை அடுத்து சமயபுரம் கோயிலில் இருந்து யானை மசினி வேறு இடம் மாற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திடீரென யானைக்கு மதம் பிடித்து தாக்கத் துவங்கி யதில் கோயிலுக்கு வந்த பக்தர்களில் பலர் காயமடைந் துள்ளனர்.
இன்று வெள்ளிக் கிழமை என்பதால் சமயபுரம் அம்மன் கோயிலுக்கு வழக்க த்தை விடக் பக்தர்கள் கூட்டம் சற்று அதிக மாகவே இருந்தது.
பாகன் கஜேந்திரன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கோயிலுக்கு வெளி பிராகாரத்தில் திரளான பக்தர்கள் காத்திருந்தனர்.
மேலும், பாகன் உயிரிழந்த தால் ஆகம முறைப்படி பரிகார பூஜைகள் செய்து இன்று மாலை சமயபுரம் மாரியம்மன் கோயில் நடை திறக்கப் படுகிறது.
கோயிலு க்குள் பாகனை யானை மிதித்துக் கொன்றதால் நாட்டுக்கு நல்ல தல்ல என ஆன்மிக வாதிகள் சிலர் கூறுவதாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளது.
Thanks for Your Comments