பெங்களூரு வேதாந்தா அலுவகம் முற்றுகை !

0
தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டதைக் கண்டித்து, பெங்களூரில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் அலுவலகத்தை முற்றுகை யிட்டுப் போராட்டம் நடத்தப் பட்டது.
பெங்களூரு வேதாந்தா அலுவகம் முற்றுகை !
தூத்துக்குடியில், வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் காப்பர் ஆலை இயங்கி வருகிறது. 

இந்த ஆலையால் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதுடன், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, குமரெட்டியா புரம் உள்ளிட்ட 21-க்கும் மேற்பட்ட கிராமங் களைச் சேர்ந்த மக்கள், 100 நாள் களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வந்தனர். 

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக த்தை நோக்கி கடந்த செவ்வாய்க் கிழமை பேரணி செல்ல முயன்ற வர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர். 

இதை யடுத்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அப்பாவி பொது மக்கள் 13 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த வர்களுக்கு, மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. 
இந்த விவகாரம், தேசிய அளவில் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தி யுள்ளது. தமிழக அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. 

இங்கிலாந்தின் லண்டனில் உள்ள வேதாந்தா குழும நிறுவனர் அனில் அகர்வாலின் வீட்டுக்கு அருகிலும் போராட்டம் நடை பெற்றது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள வேதாந்தா நிறுவன அலுவலக த்தை முற்றுகை யிட்டுப் போராட்டம் நடத்தப் பட்டது. இதில், பல்வேறு அமைப்பு களைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர். 

பெங்களூரு நகரின் முக்கிய சந்திப்பான எம்.ஜி.சாலை பகுதியில் அமைந்துள்ள வேதாந்தா அலுவலகம் முற்றுகை யால், 

அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேதாந்தா அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்தில், பல்வேறு அலுவல கங்கள் அமைந்துள்ளன. இதனால், அப்பகுதியில் கூட்டம் கூடியது. 

அந்தக் கட்டடத்தில் பணி புரியும் அலுவலர்கள் மத்தியில் பேசிய போராட்டக்காரர், நாங்கள் முட்டாள்கள் அல்ல. மிகுந்த சோகத்தில் இங்கு வந்திருக்கிறோம். 
உங்கள் கட்டடத்தின் 8-வது மாடியில் இருப்பவர்கள் கொலை காரர்கள் (வேதாந்தா அலுவலகம் 8-வது மாடியில் தான் செயல் படுகிறது) என்று பேசினார். 

மேலும், வேதாந்தா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங் களிடமிருந்து சட்ட விரோத மாக நன்கொடை பெற்றதாக, பா.ஜ.க உள்ளிட்ட தேசியக் கட்சி களையும் அவர்கள் விமர்சித்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings