அதிவேக வழித்தடங்களில் சுவர் எழுப்பி விளம்பரம் - ரெயில்வே திட்டம் | The wall raising high speed routes - Railway project !

இந்திய ரெயில்வே பல்வேறு வழிகளில் வருவாயை அதிகரிக்க புதிய திட்டங் களை தீட்டி வருகிறது. 


செலவினங் களை குறைத்தல் மூலம் வருவாயை மிச்சப் படுத்தவும் பல வழிகளில் முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலை யில், அதிவிரைவு வழித் தடங்களில் தண்ட வாளத்தின் இரு புறமும் பாது காப்புக்காக சுவர் எழுப்ப ஏற்கனெவே முடிவு செய்யப் பட்டது.


இந்நிலை யில், இந்த சுவரில் விளம்பரங்கள் செய்ய அனுமதிப்பதன் மூலம் வருவாயை ஈட்டலாம் என ரெயில்வே திட்ட மிட்டுள்ளது. 

7 முதல் 8 அடி உயரத்தில் கட்டப்படும் இந்த சுவர்கள் தண்ட வாளத்தில் ரெயில் செல்லும் போது ஏற்படும் சப்தத்தை யும் குறைக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மும்பை - டெல்லி அதிவேக தடத்தில் இந்த புதிய திட்டம் அமல் படுத்தப் படலாம் என தெரிகிறது. 

குடியிருப்பு பகுதியில் அமையும் சுவர்களில் செய்யப்படும் விளம்பரத் திற்கு அதிக கட்டணமும் 

மற்ற பகுதி களுக்கு சாதாரண கட்டணமும் நிர்ணயம் செய்யலாம் என பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings