ஹவாய் தீவில் எரிமலை வெடித்து மக்கள் வெளியேற்றம் | Thousands of evacuations erupted in the island of Hawaii !

இரண்டு நாட் களுக்கு முன் ஹவாய் தீவில் தொடர்ந்து நில நடுக்கங்கள் ஏற்பட்டதை யடுத்து கிலாயூ எரிமலை வெடித்தது. 


இந்நிலை யில் மீண்டும் நிலத்தி லிருந்து 30 அடி உயரத்திற்கு எரிமலைக் குழம்பு வெடித்துக் கிளம்புகிறது. 

சாலை களில் பிளவுகள் ஏற்படுவதால் அதன் வழியாக எரிமலைக் குழம்பு வெளியேற லாம் என்னும் அச்சத்தில் 

யாரேனும் வீடுகளை விட்டு வெளியே றாமல் இருந்தால் உடனடியாக வெளியேறு மாறு பாதுகாப்பு ஏஜென்சி அறிவித் துள்ளது. 

எரிமலைக் குழம்பி லிருந்து வெளியாகும் அபாயகர மான வாயுவான சல்பர் டை ஆக்சைடு அதிக அளவில் காணப் படுவதால் 

யாரேனும் பாதிக்கப் பட்டால் கூட அவர்களுக்கு அவசர உதவிக் குழுக்கள் உதவ முடியாத சூழல் நிலவுவ தாக அது தெரிவித் துள்ளது.


சமீபத்திய எரிமலை வெடிப்பால் இரண்டு வீடுகள் அழிந்து விட்டதாக மேயர் ஹாரி கிம் தெரிவித்துள்ளார். 

தனது வீட்டை விட்டு வெளியேறிய உள்ளூர்வாசி ஒருவர் கூறும் போது 14 ஆண்டு களுக்கு முன் இங்கு வந்தேன். 

அப்போதே இப்படி ஒரு நாள் நடக்கும் என்ற அச்சம் இருந்தது. தற்போது அது நடந்தே விட்டது. எனது குடும்பம் பாது காப்பாக உள்ளது. 

மற்ற பொருட்கள் போனால் கவலை யில்லை. அவற்றை மீண்டும் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறினார்.

வியாழனன்று ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக 1700 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப் பட்டனர். 

வெளியேற்றப் பட்டவர்களுக் காக தற்காலிக தங்கும் முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளன. 

இதற்கிடை யில் ஆயிரக் கணக்கான மக்களை வெளியேற்று வதற்கு உதவுவதற் காகவும் 

பாதுகாப்பு நடவடிக் கைகளை மேற்கொள் வதற்காகவும் தேசிய பாதுகாப்புப் படையி லிருந்து 

ராணுவ உதவியும் பெறப் பட்டுள்ள தாக ஹவாயின் கவர்னர் டேவிட் இஜ் தெரிவித் துள்ளார்.

Tags:
Privacy and cookie settings