நீட் தேர்வு மையம் உதவிக்காகக் காத்திருக்கும் மாணவர் |

தமிழக மாணவர்கள் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதவதற்கு கேரளா, ராஜஸ்தான் மாநிலத் தில் சென்டர் போட்டிருப்ப தால் 


அந்த மாநிலங் களுக்குச் செல்ல முடியாமல் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் தவிக்கும் நிலை உருவாகி யிருக்கிறது. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள புதுப்பாளை யத்தைச் சேர்ந்த மாணவன் கெளதம், நீட் தேர்வு மையம் கேரளாவில் ஒதுக்கப் பட்டுள்ளது. 

வசதி இல்லாமல் நீட் தேர்வு எழுதச் செல்ல முடியாமல் உதவிக்காகக் காத்திருக் கிறார்.

இதுபற்றி கெளதமிடம் கேட்டதற்கு, ``எங்க அப்பா பேரு செந்தில்குமார், அம்மா பேரு மகேஸ்வரி. 

அவர்களுக்கு அண்ணன் திருமூர்த்தி, நான் கெளதம் என இரண்டு பசங்க. எங்க ஊரு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுப்பாளையம். 

அப்பா தனியார் கார் டிரைவராக இருந்து எங்களைப் படிக்க வைக்கிறார். எங்க குடும்பம் மிகவும் ஏழ்மை யான குடும்பம். 


அப்பா, அம்மா படித்ததில்லை. முதல் தலை முறையாக நானும், அண்ணனும் படிக்கிறோம். 

நான் ப்ளஸ் டூ புதுப்பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளியில் தற்போது முடித்தேன். 

நான் காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வுகளில் 1000 மதிப் பெண்ணுக்கு மேல் எடுப்பேன். 

எங்க பள்ளியில் நான் 4வது ரேங்க் வருவேன். முதல் முறையாக நீட் தேர்வு எழுத இருக்கிறேன். 

ஆனால், நீட் தேர்வு எழுத எனக்குக் கேரள மாநிலம் பாலக்காடு டிஸ்ட்ரிக் கல்லூரி எனக்கு சென்டர் போட்டிருக் கிறார்கள். நான் நாமக்கல், சேலத்தை தாண்டி போன தில்லை.

எப்படியும் நம்ம மாவட்டத் திலேயே நீட் தேர்வு எழுத நீதிமன்றம் உத்தர விடும் என நம்பிக் கொண்டி ருந்தேன். 

ஆனால், நேற்று அது நிராகரிக்கப் பட்டதால் தீர்ப்பு வந்ததி லிருந்து மிகுந்த மன வேதனை யடைந்தேன். 

நான் கேரளா மாநிலத்து க்குத் தனியாகச் செல்ல முடியாது. யாரை யாவது துணைக்குக் கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும். 

இரண்டு பேர் போயிட்டு வருவதற்கு குறைந்தது 2000 செலவு ஆகும். திடீரென வீட்டில் 2000 ரூபாய் ரெடி பண்ணிக் கொடுக்கும் அளவுக்கு வசதி இல்லை.

அதனால் நேற்று இரவு முழுவதும் தூங்காமல் மன வேதனையோடு இருந்தேன். 

இன்று காலை சேலத்தை சேர்ந்த பெஸ்ட் எஜிகேஷன் டிரஸ்ட் அமைப்பைச் சேர்ந்த வர்கள் உதவி செய்வதாகச் சொன்னார்கள். 

அவர்களுக் காகக் காத்திருக் கிறேன்'' என்றார் வேதனை யுடன்.
Tags:
Privacy and cookie settings