ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்து பிரபலம் பெற்றது உலக கோப்பை கால்பந்து ஆகும். ஒலிம்பிக்கை போலவே இந்தப் போட்டியும் 4 ஆண்டு களுக்கு ஒரு முறை நடை பெற்று வருகிறது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு பிரேசிலை சேர்ந்த ரசிகர்கள், பாலத்தில் தொங்கியபடி அந்நாட்டு தேசியக் கொடியின் உருவத்தை அமைத்தது அனைவரையும் கவர்ந்தது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 14ம் தேதி ரஷ்யாவில் தொடங்கு கிறது. 32 நாடுகள் இதில் பங்கேற் கின்றன. போட்டியை நடத்தும் ரஷியா நேரடியாக தகுதி பெற்றது.
மற்ற 31 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வு செய்யப்பட்டன. ரஷியாவின் 12 விளையாட்டு மைதானங்களில், ஜூலை 15-ம் தேதி வரை போட்டிகள் நடை பெறுகின்றன.
இந்நிலை யில், போட்டியை வரவேற்கும் விதமாக, பிரேசில் நாட்டின் சாபுலோ நகரில் உள்ள பாலத்தில் 176 ரசிகர்கள்
பாலத்தில் இருந்து கயிறு உதவியுடன் தொங்கிய படி, தேசியக் கொடி உருவத்தை அமைத்து அசத்தினர். இதை ஏரளாமானோர் கண்டு களித்தனர்.
Thanks for Your Comments