வன்னியர் சங்க தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான காடுவெட்டி குரு இறந்ததை அடுத்து அரியலூர் மாவட்டம் முழுவதும்
10 க்கும் மேற்பட்ட பேருந்து கண்ணாடிகள் உடைக்க பட்டுள்ளது. பதற்றமான சூழல் நிலவுவ தால் மாவட்டம் முழுவதும் போலீஸார் குவிக்க பட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த வன்னியர் சங்க மாநில தலைவர் குரு
கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்,
இந்நிலையில் உடல்நிலை மோச மானதால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார், இதனால் அரியலூர் மாவட்ட த்தில் பதற்றம் ஏற்பட்டது,
மேலும் அவரது ஆதரவாளர்கள் ஜெயங் கொண்டம் ஒன்றிய அலுவலகம், கலாத்தூர், ஜெயங் கொண்டம் குறுக்கு சாலை ஆகிய பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டனர்,
அப்போது சில மர்ம நபர்கள் கற்களை வீசியதில் ஜெயங் கொண்டத்தில் இருந்து சென்னை சென்ற பேருந்தின் கண்ணாடி உடைக்கப் பட்டது,
இதே போல் ஜெயங் கொண்டம் குறுக்கு ரோடு அருகே கும்பகோண த்தில் இருந்து சென்னை சென்ற பேருந்து,
ஜெயங் கொண்டம் பணி மனையில் இருந்து பேருந்து நிலையம் சென்ற பேருந்தின் கண்ணாடிகளும் உடைக்கப் பட்டது, 15-க்கும் மேற்பட்ட பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப் பட்டது.
இதனை அடுத்து போக்கு வரத்து நிறுத்தப் பட்டது, இதனால் பயணிகள் செய்வது அரியாது பேருந்து நிலையத்தில் தவித்தனர். சில பகுதிகளில் தடுப்புகள் அமைத்தும் போக்கு வரத்தை தடுத்தனர்,
இதனை அடுத்து போராட்டம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று மாவட்ட கண் காணிப்பாளர் அபிநவ் குமார் அதிரடிப் படை போலீஸார் கொண்டு அப்புறப் படுத்தினார்,
இதனால் அரியலூர் மாவட்டம் முழுவதும் பதற்றம் நீடித்தது, பதற்றம் நிலவிய இடங்களில் காவல் துறை குவிக்கப் பட்டனர்,
இது குறித்து பேசிய மாவட்ட கண் காணிப்பாளர் அபிநவ் குமார், மாவட்ட த்தில் பதற்றத்தை தவிர்க்க விழுப்புரம்,
திருச்சி, பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இருந்து போலீசார் வந்துகொண்டு இருப்பதாகத் தெரிவித்தார். எந்த வித அசம்பாவித மும் ஏற்பட வாய்ப்பில்லை என்று முடித்துக் கொண்டார்.
Thanks for Your Comments