போலீஸுக்கு எதிராக சென்னை ஐ.டி ஊழியர்கள் !

0
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி கலெக்டர் அலுவல கத்தை முற்றுகையிட்ட போராட்டக் காரர்கள் 13 பேரை காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர்.
போலீஸுக்கு எதிராக சென்னை ஐ.டி ஊழியர்கள் !
இதைக் கண்டித்து, சென்னை ஐ.டி ஊழியர்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக் குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஆயிரக்கணக் கான மக்கள் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மே 22-ம் தேதி, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை யிடப் புறப்பட்டனர் பொது மக்கள். அப்போது, அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். 

 அதனால், இருவரு க்கும் இடையே தள்ளு முல்லு ஏற்பட்டது. பின்னர், அது வன் முறையாக வெடித்தது. ஒரு கட்டத்தில், காவல் துறையினர் தடியடி நடத்தினர். 

அதைத் தொடர்ந்து, போராட்டக் காரர்கள் நாலா புறமும் சிதறி ஓடினர். காவல் துறையினர் துரத்தித் துரத்தி அடித்ததால், போராட்டக் காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 

கலெக்டர் அலுவலகத்தில் புகுந்த போராட்டக் காரர்கள், அங்கிருந்த வாகனங் களை எரித்தனர். ஜன்னல் களை உடைத் தெறிந்தனர். 
வன்முறை அதிகரித்ததை யடுத்து போராட்டக் காரர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் கொல்லப் பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர் வலைகளை ஏற்படுத்தியது. 

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்தச் சம்பவத்து க்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் போராட்டங்கள், சாலை மறியல்கள் நடந்து வருகின்றன.

இதனிடையே, துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, சென்னையில் பணியும் ஐ.டி ஊழியர்கள் இன்று போராட் டத்தில் குதித்தனர். 

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ் சாலையில், ஐ.டி. ஊழியர்கள் மனிதச் சங்கிலிப் போராட்ட த்தில் ஈடுபட்டனர். அப்போது, 10 லட்சம் ரூபாய் வேண்டும்; எங்களைச் சுடுங்கள். ஸ்டெர் லைட்டை அழியுங்கள். 
தூத்துக்குடி மக்களே, நாங்கள் உங்களோடு இருப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஆவேசத்துடன் அவர்கள் முழக்க மிட்டனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings