`நிபா’வால் இறந்த செவிலியர் லினியின் குழந்தைகள் !

0
செவிலியர்கள், தன்னலமற்று சேவை புரிபவர்கள். உறவினர்களே செய்யத் தயங்கும் பணிகளை நோயாளி களுக்காக மேற்கொள் பவர்கள். 
`நிபா’வால் இறந்த செவிலியர் லினியின் குழந்தைகள் !
சம்பளத்துக் காக மட்டுமே சகித்துக் கொண்டு ஒருவர் இத்தகைய காரியங் களைச் செய்து விட முடியாது. 

அர்ப்பணிப்பு உணர்வும் தொழில் மீது கொண்ட நேசமும் மட்டுமே செவிலியர் களை இடை விடாமல் இயங்க வைத்துக் கொண்டிருக் கின்றன.
செவிலியர் பணிதான் சிறுவயது முதலே லினியின் கனவு. லினியின் தந்தை, நாள்பட்ட ஒரு நோயாளி. 

தந்தையுடன் சிறு வயது முதலே மருத்துவ மனைக்குச் சென்று பழக்கப்பட்ட லினிக்கு, 

செவிலியர்கள் அணியும் தூய்மையான வெள்ளை நிறை உடை மீது ஈர்ப்பு. தன் தந்தைக்கும் சில செவிலியர்கள் செய்த சேவை லினியின் மனதை இளக வைத்தது. 

அப்படித்தான் செவிலியர் தொழில் மீது லினிக்குப் பற்று வந்தது. முறையான செவிலியர் படிப்பைப் படிக்க ஆசைப் பட்டார். 

பெங்களூரு வில் உள்ள பவான் நர்ஸிங் கல்லூரியில் பி.எஸ்ஸி நர்ஸிங் படித்தார். படிப்பதற்கும் கல்விக் கடன் தான் உதவியது. 
மூன்று வருடப் படிப்புக்குப் பிறகு லினியின் வேலை தேடும் படலம் தொடங்கியது. 

என்ன தான் தன்னலமற்ற சேவை என்றாலும் செவிலியர் களுக்கு சொற்ப சம்பளம் தானே! லினியும் அதற்கு விதிவிலக்கு அல்ல. 
வெஜிடபிள் கொத்து பரோட்டா செய்வது
லினியின் சொந்த வாழ்க்கை சொற்பமான சம்பளத்தில் தான் ஓடிக் கொண்டிருந்தது. கல்விக் கடனைக் கூட அடைக்க முடியாமல் தடுமாறினார். 

கல்விக் கடனை ரத்து செய்யக் கோரி, அரசுக்குக் கடிதம் எழுதியும் எந்தப் பலனுமில்லை.

இதற்கிடையே லினிக்கு திருமணம் முடிந்தது. கணவர் சஜீஷ், பஹரைன் நாட்டில் பணிபுரிந்து வந்தார். 

திருமணம் முடிந்த பிறகு, பொருளாதார ரீதியாக லினியின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தாலும், செவிலியர் தொழிலை அவர் விட்டு விடவில்லை. 

இரு மகன்கள் பிறந்தனர். கணவர் சஜீஷ், `பஹரைனிலேயே செவிலியர் வேலை பார்க்கலாம் வந்து விடு' என்று அழைத்தும் லினி செல்ல வில்லை. 
தாய் நாட்டிலேயே லினியின் மருத்துவ சேவைத் தொடர்ந்தது.  தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் 
சவுதி அரேபியாவில் குடியுரிமை பெற ரூ.1½ கோடி கட்டணம் !
கோழிக்கோடு அருகே உள்ள பெரம்பாரா மருத்துவ மனையில் லினி செவிலியராகப் பணி புரிந்து கொண்டிருந்தார். 

தினசரி சம்பளம் தான். இந்நிலையில் தான் நிபா வைரஸ் உருவத்தில் லினியின் வாழ்க்கை யில் விதி விளையாடியது. 

பெரம்பாரா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முகமது ஸாலிஹ், முகமது ஸாபித், மரியம் ஆகியோரை நிபா வைரஸ் தாக்கியது. 

என்ன ஏது வென்று தெரியாமலேயே மூவரும் அடுத்தடுத்து பலியானார்கள். 

இவர்களைத் தாக்கியது என்ன நோய்? நோயின் பின்னணி ஏதும் அறியாமலேயே இவர்களுக்கு செவிலியர் லினியும் மருத்துவச் சேவை செய்தார். 
சுங்க சாவடியில் பாஸ்ட் டேக் கார்டை பயன்படுத்துவது எப்படி?
நிபா வைரஸ் தொட்டால் ஒட்டிக் கொள்ளும் உயிர்க் கொல்லி நோய். அடுத்த நாளே நிபா வைரஸ் லினியையும் தாக்கியது. 
நிபா வைரஸ் தாக்கினால் 74.5 சதவிகிதம் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை.

நோயாளி களைக் காப்பாற்ற முயன்ற செவிலியர் லினியின் உயிரையும் நிபா வைரஸ் குடித்தது. 

மனைவி உயிரிழந்த விஷயம் கணவர் சஜீஷுக்குத் தெரிவிக்கப்பட, பஹரைனில் இருந்து அவர் கதறிக் கொண்டு தாய்நாடு திரும்பினார். 

ஆனாலும், சஜீஷால் மனைவியின் உடலைப் பார்க்க முடிய வில்லை.

தன்னல மற்று சேவை புரிந்த லினியின் உடல் யார் கண்ணிலும் காட்டப் படாமல் வெஸ்ட் ஹில் மயானத்தில் எரியூட்டப் பட்டது தான் சோகத்திலும் சோகம்.
இதில் இன்னொரு வேதனை என்ன வென்றால், செவிலியர் லினியின் மகன்களான ஐந்து வயதுடைய ரிதுல், 
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் சாப்பிடாதீங்க !
இரண்டு வயதுடைய சித்தார்த் இருவரும் `அம்மா, நைட் டூட்டிக்குப் போயிருக்காங்க' என நினைத்துக் கொண்டிருக் கின்றனர். 

தாய் இறந்தது தெரியாமல் குழந்தைகள் வழக்கம் போல் விளையாடிக் கொண்டிருக் கின்றனர். 

`குழந்தைகள், அம்மா எங்கே எனக் கேட்டால் என்ன பதில் சொல்வேன்?' என்று கண்ணீர் வடிக்கும் சஜீஷைத் தேற்ற, உறவினர் களிடத்தில் வார்த்தைகள் இல்லை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings