தமிழகத்தில் உள்ள 836 அரசுப் பள்ளிகள் மூடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி யுள்ளது.
`தனியார் பள்ளிகளின் நலனுக் காகவே இப்படி யொரு நடவடிக்கையை அரசு மேற்கொள்ள உள்ளது' எனக் கொதிக்கின்றனர் கல்வி யாளர்கள்.
தமிழகத் தில் மொத்தம் 44, 214 பள்ளிகள் உள்ளன. மாணவர் களின் கல்வியை ஊக்கு விக்க, தமிழக அரசு சார்பில் மத்திய உணவுத் திட்டம்,
சீருடைகள், புத்தகங்கள் காலணிகள் உள்ளிட்ட பல இலவச நலத் திட்டங்கள் நடை முறையில் செயல் பட்டு வருகின்றன.
இருந்த போதிலும், அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் களின் சேர்க்கை விகிதம் உயர்ந்த தாகத் தெரிய வில்லை.
இதனால், 10-க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் அரசு தொடக்கப் பள்ளிகளை மூடி விடலாம் என
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நேற்று கல்வி அலுவலர்கள் கூடி ஆலோசித் தனர் என்ற தகவல் வெளியாகியது.
இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம்,
`தொடக்கப் பள்ளிகளில் மாணவர் களின் வருகை குறைந் துள்ளதுக் கான காரணம் என்ன?
முறையான கட்டமைப்பு வசதி பள்ளிகளில் இருக்கிறதா? சத்துணவுத் திட்டம் சரியாகச் செயல் படுகிறதா ?
மாணவர் களுக்குப் போதிய பாதுகாப்பு உள்ளதா? பெற்றோர்கள் மத்தியில் அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? கழிப்பறை வசதி பள்ளிகளில் உள்ளனவா?
கார்டியோ பயிற்சி என்றால் என்ன?
இவை, எதையும் பள்ளிக் கல்வித் துறை கவலைப்பட வில்லை. அதற்கான ஆய்வு நடவடிக்கை களைத் தொடர வில்லை.
ஆனால், 10-க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் அரசு தொடக்கப் பள்ளிகளை மூடுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது.
இவ்வாறான நடவடிக்கை களை அரசு மேற் கொள்கையில் ஒன்றுக்குப் பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும்'' என்றார்.
இதனை யடுத்து, தமிழ்நாடு பெற்றோர் மாணவர் நலச் சங்க மாநிலத் தலைவர் அருமை நாதனிடம் பேசினோம்.
`தமிழக அரசின் இந்த நடவடிக்கை தனியார் பள்ளிகளுக்குச் சாதகமாக எடுக்கப் பட்டுள்ளது. தற்போது, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை யானது 45 சதவிகிதம் குறைந்துள்ளது.
மேலும் பல பகுதிகளில் ஒரு அரசுப் பள்ளியைச் சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல் பட்டு வருகின்றன.
அரசுப் பள்ளிகளின் கல்வித்த ரங்களை உயர்த்தும் நடவடிக்கை யில் அரசு ஈடுபட வில்லை. ஆர்வமும் காட்ட வில்லை.
இதனால், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அருகிலிருக்கும் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நிலைக்குத் தள்ளப் படுகின்றனர்.
அதுமட்டு மல்லாமல், தனியார் பள்ளிகள் வசூலிக்கும் அதிகக் கல்விக் கட்டணத் தால் அவர்கள் அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.
தமிழக அரசு மறை முகமாகக் கல்வியைத் தனியாரிடம் ஒப்படைத்து வருகிறது. தனியார்ப் பள்ளிகளை ஊக்கு வித்தும் வருகிறது'' என்றார்.
கருமுட்டைகளை விற்பனை செய்யும் பல்கலைக்கழக மாணவிகள் !
`அரசின் இந்த நடவடிக்கை ஆசிரியர் களையும் பாதிக்கும்'' என்கிறார் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் க.சாந்த குமார்.
இது குறித்து அவர் பேசுகை யில், ``தனியார்ப் பள்ளி களில், 25 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையி லான மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் சேர்க்கப் படுகின்றனர்.
இந்த ஒதுக்கீட்டின் கீழ் பெரும் பாலும் அரசுப் பள்ளி மாணவர்கள் தாம் விண்ணப் பிக்கின்றனர்.
சுமார் ஒரு லட்சத்து முப்பத்து இரண்டாயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் தற்போது தனியார் பள்ளி களுக்குப் படிக்கச் சென்று விட்டனர்.
இதனால், 4,400-க்கும் அதிகமான ஆசிரியர் பணி யிடங்கள் தமிழகத்தில் காலியாக இருக்கின்றது.
எனவே, தமிழக அரசு கல்வியைத் தனியார் மயமாக்கி வருகிறது'' என்றார்.
இது தொடர்பாக பள்ளிக் கல்வி துறை அதிகாரி களிடம் பேசினோம், `தமிழக அரசின் இயக்குநரகம் கட்டுப் பாட்டில் அரசுப் பள்ளிகள் - 629 மாநகராட்சிப் பள்ளிகள் - 436, நகராட்சிப் பள்ளிகள் - 839 மற்றும் நர்ஸரி
நிலவிற்கு பதில் பெங்களூரில் இறங்கிய விண்வெளி வீரர்? – வீடியோ !
மற்றும் பிரைமரிப் பள்ளிகள் - 6308, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு நலத்துறைப் பள்ளிகள் எனத் தமிழகத்தில் மொத்தம் 44, 214 பள்ளிகள் உள்ளன.
இதில், பத்துக்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் தொடக்கப் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்று கின்றனர்.
இங்கு வேலை பார்க்கும் ஆசிரியர் களுக்குச் சம்பளமாக லட்சக் கணக்கில் பணம் செலவழிக்கப் படுகிறது.
இதனால் தான் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளோடு இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம்.
தற்போதைய சூழலில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு அரசுப் பள்ளி செயல் படுகிறது.
இதனால் மாணவர் களுக்கும் ஆசிரியர் களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும், கடந்த கல்வி ஆண்டிலும் அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப் படுகின்றன.
இதனால் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு கல்வி ஆண்டும் அதிகரித்துத் தான் வருகின்றன. இதனை இன்னும் அதிகரிக்கவே கணக்கெடுப்பு நடத்தப் பட்டது'' என்றார்.
மது பானங்களிலேயே பீர் ஏன் உடலுக்கு நல்லது - தெரியுமா ?
பள்ளிகள் மூடப்படுவ தாக வெளியான தகவலை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துள்ளார்.
தனியார் தொலைக் காட்சிக்குப் பேட்டி யளித்த அவர், `அரசு தொடக்கப் பள்ளிகளை மூடும் எண்ண மில்லை’ என்று தெரிவித் துள்ளார்.
Thanks for Your Comments