இந்தியா வின் ராஜஸ்தான் மாநிலத்தில் டோல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமம் ராஜ்காட் என்பதாகும். இது சம்பல் ஆற்றங் கரையில் அமைந் துள்ளது.
350 பேர் மட்டுமே வசிக்கும் இந்த கிராமத்தில் ரோடு வசதி இல்லை. மின்சாரம் கிடையாது. குடிநீர் குழாய்கள் மற்றும் மருத்துவவசதி எதுவுமே கிடையாது.
இத்தகைய அடிப்படை வசதி எதுவும் இல்லாத இக்கிராம த்தில் வாழும் இளைஞர் களுக்கு கடந்த 22 ஆண்டு களாக திருமணமே நடைபெற வில்லை
காரணம் எந்த விதமான அடிப்படை வசதியும் இல்லாத கிராமத்துக்கு தங்களது மகளை திருமணம் செய்து தர அண்டை நகரம் மற்றும் கிராமத்து பெற்றோர் விரும்ப வில்லை.
தற்போது ஒரு இளைஞர் செய்துள்ள காரியத்தின் மூலம் இந்த கிராமத்தின் நிலை மாறி யுள்ளது .
இவர் தனது கிராமத்தின் அவல நிலை குறித்தும், கிராமத்து இளைஞர்கள் திருமண மாகாமல் வருடக் கணக்கில் தவித்து வருவது
குறித்தும் வெளி உலகத் தினருக்கு இமெயில், டுவிட்டர் மூலம் உலகிற்கு வெளிப் படுத்தி யுள்ளார்.
இந்த இளைஞர் அஸ்வனி பராசர் என்பவர் ஜெய்ப்பூர் சவாய்மேன் சிங் அரசு மருத்துவ கல்லூரி யில் இறுதி ஆண்டு எம்.பி.பி.எஸ் பட்டப் படிப்பு படிக்கிறார்.
அதுமட்டு மன்றி குறித்த இளைஞர் தனது கிராமத்து க்கு ராஜஸ்தான் அரசு ரோடு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதியை செய்து தரக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொட ந்துள்ளார்.
22 ஆண்டு களுக்கு பிறகு ராஜ்காட் கிராமத்தில் ஒரு வாலிபருக்கு சமீபத்தில் திருமணம் நடை பெற்றது.
23 வயதான இவருக்கு அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்தில் இருந்து மணப்பெண் கிடைத் துள்ளது.
இதனால் இந்த திருமண நிகழ்வை கிராம மக்கள் அனைவரும் ஆடிப்பாடி மகிழ்ச்சி யுடன் கொண்டாடி யுள்ளனர்.