நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனப் பல கட்சிகள் போன வருஷம் போராடினாங்க. அப்போது இந்த வருடம் நீட்தேர்வுக் கான தீர்வு நிச்சயம் கிடைக்கும் என்றார்கள்.
நாங்களும் நம்பினோம். ஆனால், நீட் தேர்வு தமிழகத் திலேயே எழுது வதற்குக் கூட முடியாமல் போய் விட்டது. இனி எல்லோரும் என்ன செய்யப் போகிறோம்' என மானவர்கள் வேதனை தெரிவித்தனர்.
நீட் தேர்வு எழுதுவ தற்கு கடும் மன உளைச்சலுடன் எர்ணாகுளம் புறப்பட்டுக் கொண்டிருந்தார் ஆகாஷ் என்ற மாணவன். ஆகாஷிடம் பேசினோம்.
நான் மன்னார்குடி யில் இருக்கிறேன். என் அப்பா மின்சாரத் துறையில் பணி புரிந்து வருகிறார். அவரைப் போல் நான் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக என்னை நன்றாகப் படிக்க வைத்தார்.
நான் டாக்கர் ஆகணும்ப்பா என அப்பாவிடம் அடிக்கடி சொல்வேன். நீட் தேர்வு எழுதுவதற் காகக் கொடுத்த அப்ளிகேஷனில் பக்கமாக இருக்கக் கூடிய திருச்சி, கோயம்புத்தூர் அல்லது சென்னை கேட்டிருந்தேன்.
ஆனால், இவர்கள் எனக்கு எர்ணா குளத்தில் சென்டர் ஒதுக்கி யுள்ளார்கள்.
எர்ணா குளத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாம் எனக்கு ஒதுக்கபட்ட தேர்வு மையம். எனக்கு தமிழைத் தவிர, வேறு எந்த மொழியும் தெரியாது.
மன்னார்குடியி லிருந்து எர்ணாகுளம் செல்லும் போது பயணத்தின் களைப்பில் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் கூட போகலாம். அங்கு சாப்பிடும் உணவு ஒத்துக்கு மான்னு தெரியலை.
நான் என்ன, சுற்றிப் பார்ப்பதற்கு சுற்றுலாவா போறேன். சரி போனா போகுது என விட்டுத் தள்ளு வதற்கு. தேர்வு எழுதச் செல்கிறேன். சோர்வு இல்லாமல் இருந்தால் தான் நன்றாக எழுத முடியும்.
நமக்கு பழகிய இடத்தில் தேர்வு மையத்தை ஒதுக்காத தால் நான் கடுமை யான மன உளைச் சலுக்கு ஆளாகி யிருக்கிறேன். அப்பா தான் என்னைத் தேற்றி அழைத்துக் கொண்டு செல்கிறார்.
மாணவர் களாகிய எங்கள் மனதைப் பற்றிக் கொஞ்சம் கூட அரசு நினைக்க வில்லை. போன வருஷம் நீட் தேர்வுக்காக நடந்த போராட்டங் களின் போது இந்த வருஷம் எல்லாம் சரியாகி விடும் என்றார்கள்.
ஆனால் இப்போது தேர்வைக் கூட நம் மண்ணில் எழுத முடிய வில்லை. நுழைவு டிக்கெட் வந்து 15 தினங் களுக்கும் மேலாக இருக்கும்.
ஆனால், இப்பதான் முக்கிய அரசியல் கட்சிகள் இதற்காகக் குரல் கொடுத்து போராடிக் கிட்டு இருக்காங்க. இதைக் கொஞ்சம் முன்னாடியே செஞ்சிருக்கலாம்.
பிஞ்சு மனசை வெம்ப வைக்கிறாங்க சார் எனச் சொன்னார். தஞ்சாவூரைச் சேர்ந்த நிகரன் என்ற மாணவனின் தந்தை மாவட்டத் தலை நகரங் களான தஞ்சாவூரில் கூட தேர்வு மையத்தை அமைக்காதது வேதனை.
இங்கு விவசாயம் தான் முக்கிய தொழில். எந்த வெளி உலகமும் தெரியாத அவர்கள், அடுத்த மாநிலத்துக்கு சென்று எப்படித் தேர்வு எழுதுவார்கள்.
அரசு என்பது அனைத்தையும் கவனத்தில் கொண்டு தான் எல்லா வற்றையும் நடை முறைப் படுத்த வேண்டும்.
ஆனால், நடப்பதை யெல்லாம் பார்க்கும் போது வரும் காலத்தில் தமிழக மாணவர் களின் நிலை கேள்விக் குறியாகத் தான் இருக்கும்'' என வெடித்தார்.