இளம் வயதில் எவரெஸ்டில் சாதனை படைத்த சிறுமி !

0
மவுன்ட் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ள சிவாங்கி பதக் என்ற சிறுமிக்கு, ட்விட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
இளம் வயதில் எவரெஸ்டில் சாதனை படைத்த சிறுமி !
மோடி - மவுண்ட் எவரெஸ்ட்

இமய மலையின் மஹாலங்கூர் மலைத் தொடரில் அமைந்து உள்ளது எவரெஸ்ட் மலை. இது உலகிலேயே மிக உயரமான சிகரமாகும். 

இங்கு, உறைய வைக்கும் பனிப்பொழிவு மற்றும் மைனஸ் டிகிரியில் குளிர் நிலவும். கடல் மட்டத்தி லிருந்து 8,848 மீட்டர் உயரம் கொண்ட சிகரத்தில் ஏறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. 

இருந்தாலும், மலையேற்றத் தொடர் பயணத்தில் ஆர்வம் கொண்ட பலர், எவரெஸ்ட் மலையில் ஏறி சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

சில சமயங் களில் சாதனைக்காக மலையேறிய வர்கள் அங்கு நிலவும் தட்ப வெப்ப நிலையைச் சமாளிக்க முடியாமல் உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந் துள்ளது.
இப்படிப்பட்ட, இடர்ப் பாடுகளை எல்லாம் தகர்த்து விட்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்திருக் கிறார் 16 வயது சிறுமி சிவாங்கி பதக். 

இதன் மூலம் இளம் வயதில் எவரெஸ்டை தொட்ட இந்திய பெண் என்ற பெருமை சிவாங்கி பெற்றுள்ளார். இவர், ஹரியானா மாநிலம் பிசார் பகுதியைச் சேர்ந்தவர். 

இவரின் சாதனையைப் பாராட்டி யுள்ள பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில், `எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி மகத்தான சாதனை படைத்துள்ள சிவாங்கி பதக்குக்கு வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார். 

மேலும், வானொலியில் சிறுமியின் சாதனை குறித்து செய்தி வெளி யானதையும் இணைத்துப் பதிவிட் டுள்ளார்.
இது குறித்து பேசிய சிவாங்கி, `உடல் ஊனத்துடன் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் இந்தியரான அருணிமா சின்ஹாவின் சாதனை என்னை வெகுவாக ஈர்த்தது. 

அவரை முன் உதாரணமாக வைத்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயற்சி செய்தேன். எனது சாதனையைப் பிரதமர் மோடி வாழ்த்தியது பெருமை யாக உள்ளது' என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings