முதல் முறையாக மிதி வண்டிகளுக்கான பிரத்யேக பாதை !

0
தலைநகர் டெல்லியின் வாகன எண்ணிக்கை ஒரு கோடி என்ற எண்ணிக்கையை நெருங்கி வரும் நிலையில், 
முதல் முறையாக மிதி வண்டிகளுக்கான பிரத்யேக பாதை !
போக்கு வரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாடு காரணமாக மூச்சுவிடக் கூட சிரமப்படும் நிலையில் தான் டெல்லி வாசிகள் தவித்து வருகின்றனர்.

காற்று மாசுபாட்டை தவிர்க்கும் பொருட்டு மரபு சாரா எரிசக்தியில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை நோக்கி டெல்லி மட்டுமல்லாது இந்தியாவும் பயணிக்கிறது.

டெல்லியில் அதிகரித்த போக்கு வரத்து நெரிசலால் அலுவலகம், பள்ளி, கல்லூரி செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இதன் காரணமாக டெல்லியில் உள்ள தனது தொகுதியான சாஸ்திரி பார்க் (போக்கு வரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதி) பகுதிக்கு சிக்னல் இல்லாத பிரத்யேக பாதை ஒன்றை அமைக்கக் கோரி 

பாஜகவைச் சேர்ந்த பாரளுமன்ற உறுப்பினரான மனோஜ் திவாரி, மத்திய சாலை போக்கு வரத்து அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்தார்.

இது குறித்து ஆராய்ந்த மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தற்போது இத்திட்ட த்திற்கு முதல் கட்ட அனுமதியை அளித்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் முதல் முறையாக மிதி வண்டிகளுக் கான உயர்த்தப் பட்ட பிரத்யேக பாதை 4.8 கிமீ தூரம் கொண்ட கீதா காலனி - சாஸ்திரி பார்க் இடை யிலான பகுதியில் அமைக்கப் படலாம் என்று கூறப் படுகிறது.
யமுனா நதியை யொட்டி அமையவுள்ள அக்‌ஷர்தாம் (டெல்லி) - சாஹ்ரன்பூர் (உத்தரப் பிரதேசம்) நெடுஞ் சாலைக்கு மேல் பகுதியில் இந்த உயர்த்தப் பட்ட பிரத்யேக மிதி வண்டிப் பாதை அமைக்க ப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. 

நெடுஞ் சாலைக்கு மேல் இப்பாதையை அமைப்பதால் யமுனா நதிக்கு எந்த பாதிப்பையும் இது ஏற்படுத்தாது. 

இப்பாதையில் எழில்மிகு தோட்டங்களும் அமைக்கப் படலாம், இதனை பாதசாரிகளும் பயன் படுத்தலாம், போக்கு வரத்து பகுதியில் இருந்து இப்பாதை பிரிக்கப் பட்டிருப்பதால் விபத்தில்லா பகுதியாகவும் இது விளங்கும்.

கடந்த ஆண்டு சீனாவின் Funjian மாகானத்தில் உள்ள XIAMEN நகரில் உலகின் மிக நீளமான மிதி வண்டிகளுக்கான பிரத்யேக உயர்த்தப் பட்ட பாதை செயல் பாட்டிற்கு வந்தது. 

இது 7 கிமீ நீளம் கொண்டது. இங்கு மிதிவண்டிகளுடன், எலக்ட்ரிக் பைக்கு களுக்கும் அனுமதி அளிக்கப் படுகிறது.

தற்சமயம் டெல்லியில் உள்ள பிரத்யேக மிதி வண்டிகளுக்கான பாதையானது. கடந்த 2010ஆம் ஆண்டு காமன் வெல்த் போட்டி நடத்தப் பட்ட போது அமைக்கப் பட்டது. 

எனினும், பல இடங்களில் வாகன போக்கு வரத்துப் பாதைகளை ஒன்றுபட்டு செல்வதால் இதனை இரு சக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்து கின்றனர். இதன் காரணமாக மிதி வண்டி ஓட்டிகள் விபத்துக் குள்ளாகி வருகின்றனர்.
தற்போது அமைக்கப் படவிருக்கும் மிதி வண்டிகளுக்கான உயர்த்தப் பட்ட பிரத்யேக பாதையானது மிதிவண்டி ஓட்டிகளுக்கு பாதுகாப் பானதாக இருக்கும். 

சாய்வுப் பாதைகள் மூலம் இந்த பிரத்யேக பாதை ஆங்காங்கே சாலை களுடன் இணைப்பு பெற்றி ருக்கும் என்பதால் இது வாகன நெரிசலை குறைக்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings