தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் முதல் அலகை மூட தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தர விட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டம் நடைபெற்று வந்த நிலையில்
கடந்த செவ்வாய்க் கிழமை நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது, போலீஸார் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் புதன் கிழமை நிலவரப்படி, 2 பெண்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், போலீஸாரின் தடியடியில் காயமடைந்து அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த,
தூத்துக்குடி சாயர்புரம் அருகே யுள்ள இருவப்ப புரத்தைச் சேர்ந்த செல்வசேகர் (42) வியாழக் கிழமை உயிரிழந்தார். இதை யடுத்து தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலை யில், ஸ்டெர்லைட் ஆலையின் முதல் அலகை மூட தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தர விட்டுள்ள தாக ஸ்டெர்லைட் நிறுவனம் தெரிவித் துள்ளது.
இது தொடர்பாக மும்பை பங்குச் சந்தைக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
கடந்த 23-ஆம் தேதி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மின் இணைப்பை துண்டித்ததோடு, ஆலையின் முதல் அலகை மூடுமாறு உத்தர விட்டுள்ளது.
ஏற்கெனவே, மார்ச் 27-ஆம் தேதி முதல் ஆலை செயல் படாமல் தான் இருந்து வருகிறது. அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம் என்றும் மூடப்பட்ட முதல் அவகின் தற்போதைய மதிப்பு ரூ.2100 கோடி எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக, உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப் பட்டுள்ளதாக வும், தீர்ப்பு வெளியான பின்பே முடிவு தெரிய வரும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Thanks for Your Comments