இந்தியரை பயங்கரவாதியாக மாற்றிய விமான பணிப்பெண் !

ஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன் ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார்.
இந்தியரை பயங்கரவாதியாக மாற்றிய விமான பணிப்பெண் !

தெற்கு பிலிப்பைன்ஸ்சில் உள்ள மாராவியில் நடந்த பயங்கர வாதிகள் தாக்குதலில் இவருக்கும் தொடர்பு இருப்பதாக அந்நாட்டு போலீசார் இவரை கைது செய்தனர்.


இவரிடம் நடத்திய விசாரணையில் இவருக்கு ஐ.எஸ். பயங்கர வாதிகளுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. 

பிலிப்பைன்ஸ் மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் துக்கு இவர் ஆள் சேர்த்து வந்தார்.

அதற்காக ‘வாட்ஸ் அப்’, ‘பேஸ்புக்‘ போன்ற சமூக வலை தளங்களை பயன் படுத்தி இருக்கிறார். 

அவற்றின் மூலம் 20 இந்தியர் களை ஐ.எஸ். பயங்கரவாத இயக்க த்தில் இணைத் துள்ளார். மேலும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க த்துக்கு நிதி திரட்டி பண உதவி செய்துள்ளார். 

இதற்கு வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளி நாடுகளில் வாழும் இந்தியர் களின் உதவியை நாடி யுள்ளார். 


இவை தவிர காஷ்மீரை சேர்ந்த 4 இளைஞ ர்களையும் டாமன் மற்றும் டையூவை சேர்ந்த ஒருவரையும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து இருக்கிறார். 

ஐதராபாத் மற்றும் கான்பூர், கொல்கத்தாவை சேர்ந்த தலா ஒருவரும் அதில் அடங்குவர். தொடக்க த்தில் இவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் துக்கு பண உதவி செய்து வந்தனர்.

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை இந்தியாவி லும் கால் ஊன்ற செய்து அதை நாடு முழுவதும் பரப்ப திட்ட மிட்டு இருந்தார். 

மேற்கண்ட தகவல்கள் தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் முதலில் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி சிராஜுதீன் என்பவர் சிக்கினார். 

அவரிடம் தேசிய குற்றப் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய விசாரணை யில் கரன்ஆயிஷா சம்பந்தப் பட்டிருப்பது தெரிய வந்தது.


சிராஜூதீன் தனது பிறந்த குழந்தையை ஐ.எஸ். பயங்கர வாத இயக்க த்தில் சேர்க்க சிரியா செல்ல இருந்த போது போலீசாரிடம் சிக்கினார்.
Tags:
Privacy and cookie settings