யாருக்காக ஆன்லைன் கவுன்சலிங்? மாணவர்களுக்கு அடுத்த செக் !

அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் கலந்தாய்வு முறைக்கு எதிராகக் கொந்தளிக் கின்றனர் கல்வியாளர்கள். மாணவர்கள் நலனை முன்னிறுத்தி ஆன்லைன் கலந்தாய்வு மென்பொருள் தயாரிக்கப்பட வில்லை.
யாருக்காக ஆன்லைன் கவுன்சலிங்?'மாணவர்களுக்கு அடுத்த செக் !
இதில் குளறுபடிகள் நடக்கவே வாய்ப்பு அதிகம் என்கின்றனர் கல்வியாளர்கள். தமிழ் நாட்டில் 562 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 

இதில், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகள் ஆகியவை அடங்கும். 

இந்தக் கல்லூரிகளில் உள்ள பி.இ, பி.டெக் படிப்பு களில் சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், 1 லட்சத்து 80 ஆயிரம் இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட உள்ளன. 

ஆண்டு தோறும் மாணவர்களைச் சென்னைக்கே வரவழைத்து, பொதுக் கலந்தாய்வை நடத்தி வந்தது அண்ணா பல்கலைக்கழகம். 

கடந்த ஆண்டு ஆன்லைன் பதிவு முறையைக் கொண்டு வந்தவர்கள், இந்த ஆண்டு முதல் முறையாக ஆன்லைன் கலந்தாய்வு முறை நடை முறைப்படுத்த உள்ளனர். 

ஜூலை முதல் வாரத்தில் இந்த ஆன்லைன் கலந்தாய்வு தொடங்குகிறது. 2018-19 கல்வியாண்டு சேர்க்கைக்காக இன்றிலிருந்து வரும் 30-ம் தேதி வரையில் ஆன்லைன் பதிவு செய்து கொள்ளலாம்' 

என அறிவித்தி ருக்கிறார் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமன்ட் உத்தரியராஜ். 

இந்தக் கலந்தாய்வின் மூலம் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப் படுவார்கள் எனக்கூறி, சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. 

இது குறித்து வரும் 9-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்' என உத்தர விட்டுள்ளது உயர் நீதிமன்றம். அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவரிடம் பேசினோம். 

கலந்தாய்வில் பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் www.annauniv.edu/tnea2018 என்ற இணைய தளத்தை பயன்படுத்தி, 
அதில் கேட்கப்படும் அடிப்படை விவரங்களைக் குறிப்பிட்டு முதலில் தங்களுக்கென ஒரு யூசர் ஐடி, பாஸ்வேர்டு ஆகிய வற்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

இதன் மூலம் ஆன்லைன் பதிவைத் தொடங்கி தேவை யான விவரங் களைப் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதற்கு முன்பாக செல்போன் எண், இ-மெயில் முகவரி, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்று, 

பிளஸ் 2 ஹால் டிக்கெட் (பதிவு எண்ணுக் காக) 8-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த பள்ளியின் விவரங்கள், சாதிச் சான்றிதழ், ஆதார் எண், பெற்றோரின் ஆண்டு வருமானம், பதிவுக் கட்டணம் செலுத்து வதற்கு டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் விவரம் 

ஆகிய விவரங் களைத் தயாராக வைத்திருந்து பதிவு செய்ய வேண்டும் என்பதை விதியாக வைத்திருக் கிறார்கள். 

இணைய வசதி இல்லாத மாணவர் களுக்காக 42 இடங்களில் மாணவர் சேர்க்கை உதவி மையங்களில் இலவச மாகப் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித் துள்ளனர். 

இதெல்லாம் சரி...காலத்துக் கேற்ப மாறிக் கொள்வதை வரவேற்கிறோம். ஆனால், ஆன்லைன் கலந்தாய்வு முறையால் யாருக்கு நன்மை என்பது தான் எங்களது பிரதான கேள்வி" என்றவர்,

ஆன்லைன் கலந்தாய்வு
ஆன்லைன் கவுன்சலிங் மாணவர் களுக்கு ஏற்ற வகையில் இல்லை. ஒரு முறை ஒரு கல்லூரியைத் தேர்வு செய்து விட்டால், அவ்வளவு தான். 

அந்த மாணவரு க்கு மாற்றுக் கல்லூரியைத் தேர்வு செய்வதற்கு ஓரிரு நாள்கள் மட்டுமே அவகாசம் கொடுக் கின்றனர். மத்திய அரசின் ஐ.ஐ.டி ஜே.இ.இ கவுன்ச லிங்கில் கூட ஒரு மாணவருக்கு நான்கு வாய்ப்புகள் அளிக்கப் படுகின்றன. 

மருத்துவ கவுன்சலிங் நடப்பதற்கு முன்னதாகப் பொறியியல் கலந்தாய்வு நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். பொறியியல் படிப்பைத் தேர்வு செய்த மாணவருக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்து விட்டது என்றால், 

அண்ணா பல்கலைக் கழகத்தில் அந்த மாணவர் தேர்வு செய்த இடம் காலியாக இருக்கும். இவர்கள் கொடுக்கும் மூன்று நாள் அவகாசத்தில் மருத்துவ கவுன்சலிங் நடக்கப் போவதில்லை. 

அப்படி யென்றால், அண்ணா பல்கலைக் கழகத்தில் மருத்துவம் படிக்கச் சென்ற மாணவரின் இடம் காலியாகி விடும். இந்தத் தகவல், அடுத்த நிலையில் இருக்கும் மாணவருக்குத் தெரியப் போவதில்லை. 
யாருக்காக ஆன்லைன் கவுன்சலிங்? மாணவர்களுக்கு அடுத்த செக் !
இதற்கு முந்தைய கலந்தாயில் இதனைத் தெரிந்து கொள்ளும் வசதி இருந்தது. இவர்கள் உருவாக்கி யுள்ள சாஃப்ட்வேரில் அதற்கு இடம் இல்லை. 

ரயிலில் டிக்கெட் பதிவு செய்யும் போது கூட, மூன்றாவது ஏ.சி கோச்சி லிருந்து ஒருவர் இரண்டாவது ஏ.சி கோச்சில் இடம் காலியாக இருந்தால் மாறிக் கொள்ளலாம். 

அதற்கான வாய்ப்பை ஐ.ஆர்.சி.டி.சி உருவாக்கிக் கொடுத்தி ருக்கிறது. அண்ணா பல்கலைக் கழகக் கலந்தாய் வின் மூலம் ஒரு மாணவர் எஸ்.எஸ்.என் கல்லூரி யில் சேர்ந்து விடுகிறார். 

அவருடைய மதிப்பெண் ணுக்கு அண்ணா பல்கலைக் கழகத்திலேயே இடம் காலி யாக இருக்கிறது என்ற விவரம் தெரியப் போவ தில்லை. எஸ்.எஸ். என்னில் கல்லூரிக் கட்டணம் ஒன்றே கால் லட்ச ரூபாய். 

அதுவே, அண்ணா பல்கலைக் கழகத்தில் வெறும் 25 ஆயிரம் ரூபாய். உலகம் முழுக்க அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் பிரபலம். 

இப்படியோர் இடம் காலியாகி விட்டது என்ற உண்மை தெரியா மலேயே அந்த மாணவர் அதிகக் கட்டணம் செலுத்தி படித்துக் கொண்டிருப்பார். அந்தக் கோட்டாவில் காலியாகும் இடத்தை, யார் அபகரித்துக் கொள்ளப் போகிறார்கள். 

இதற்காக எவ்வளவு பணம் விளையாடும் என்பதெல்லாம் உயர் கல்வித் துறை அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

ஐ.ஐ.டிக்கு இணையாக ஆன்லைன் கவுன்சலிங் நடத்துகிறார்கள் என்றால், அந்த சாஃப்ட் வேரோடு இதை ஒப்பிட்டுப் பார்க்கட்டும். 
இவர்களுக்கு வசதியாக ஐ.ஐ.டி ஜே.இ.இ ஆன்லைன் கவுன்ச லிங்கைக் கணக்கில் எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள். மென் பொருளில் சில மாற்றங்களைச் செய்வதற்கு நிர்வாகம் ஏன் தயங்குகிறது எனத் தெரிய வில்லை. 

இதன் பின்னணியில் உயர் கல்வித்துறை அதிகாரிகளின் பின்னணி விசாரிக்கப்பட வேண்டும். துணை வேந்தருக்குத் தெரிந்து தான் இது நடக்கிறதா எனவும் தெரிய வில்லை என்றார் ஆதங்கத் துடன்.

மன்னர் ஜவஹர்அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் மன்னர் ஜவஹரிடம் பேசினோம். ஆன்லைன் கவுன்சலிங் முறையை முன்பே ஒருமுறை செயல் படுத்திப் பார்த்தோம். 

இதற்காக மூன்று இடங்களைத் தேர்வு செய்து நடத்தினோம். அது வெற்றியைக் கொடுக்க வில்லை. நமது கிராமப்புற மாணவர் களுக்குப் பழைய சிஸ்டம் தான் சிறந்தது. 

அவர்களே நேரடியாக வந்து தேர்வு செய்வது தான் சரியான தாக இருக்கும் என்றார். இது குறித்து, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமன்ட் உத்தரியரா ஜிடம் பேசினோம். 

மருத்துவக் கவுன்சலிங் தொடங்கிய பிறகுதான், பொறியியல் கவுன்சலிங்கைத் தொடங்க இருக்கிறது. 

மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இடம் கிடைத்தாலும், மருத்துவமா.. பொறியியலா.. என அவர்கள் முடிவு செய்து விட்டு, ஏற்கெனவே வாங்கிய சீட்டை சரண்டர் செய்து விடலாம். 

இது காலம் காலமாக நடை முறையில் உள்ள வழக்கம். ஆன்லைன் கலந்தாய் விலும் இது தொடரும். ஒரு மாணவருக்கு மூன்று நாள் அவகாசம் ஏன் கொடுக் கிறோம் என்பதையும் விளக்குகிறேன்.
ரேங்க் போட்ட பிறகு கவுன்சலிங் பணிகள் தொடங்கும். ஐந்து சுற்று களாக மாணவர் களைப் பிரிக்கிறோம். மூன்று நாள் அவகாச த்தில் அவர்கள் என்ன வெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் விளக்கு கிறோம். 

அதற்கேற்ற புக்லெட், வீடியோ காட்சிகள் ஆகியவற்றை வழங்க இருக்கி றோம். அந்த மூன்று நாள்களில் எவ்வளவு சாய்ஸ் களை வேண்டு மானாலும் அவர்கள் எடுத்துக் கொள்ளலாம். 

அந்த சாய்ஸை வரிசைப் படுத்திக் கொடுக்க வேண்டும். அதன் பிறகு கோட்டா படியும் ரைமண்ட் உத்திரி யராஜ்ரேங்க் அடிப்படை யிலும் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். 

அந்த இடத்தை உறுதிப் படுத்த இரண்டு நாள் அவகாசம் கொடுக்கிறோம். இதில் எந்தவித பிரச்னையும் வரப் போவ தில்லை.

கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப் படுவது என்பது, இணைய வசதி இல்லாததை மையமாக வைத்துச் சொல் கின்றனர். 

இவர்களுக் காகத்தான் மாநிலம் முழுவதும் 42 இலவச இணைய மையங் களைத் தொடங்கி யிருக்கிறோம். அங்கு அவர்களுக்கு வழி காட்ட பேராசிரி யர்கள் இருக் கிறார்கள். 

எந்தக் கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டும் என அந்தப் பேராசிரியர்கள் வழிகாட்ட மாட்டார்கள். முழுக்க மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம். 

முதல் நாள் ஆன்லைனில் பதிவு செய்தவர்களின் எண்ணி க்கையைப் பார்த்தால், இலவச சேவை மையங்களைப் பயன்படுத்துகிற வர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. 

மாணவர்கள் வீட்டில் இருந்த படியே பதிவு செய்கிறார்கள். மாணவரின் மதிப் பெண்ணுக்கு எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் என்பதைச் சுட்டிக் காட்டு கிறோம்.

சென்னை க்கு நேரடியாக வந்து பங்கேற்ற காலங்களில் மூன்று சாய்ஸ் களைக் கொடுத்து ஐந்து நிமிடத்தில் ஒரு மாணவனின் கவுன்சலிங்கை முடித்து விடுவோம். 
யாருக்காக ஆன்லைன் கவுன்சலிங்? மாணவர்களுக்கு அடுத்த செக் !
இப்போது அப்படியல்ல. மூன்று நாள் அவகாசம் கொடுத்து, ஏராளமான சாய்ஸ் களைக் கொடுக் கிறோம். இதில் கிராமப்புறம், நகர்ப்புறம் என்ற வேறு பாடுகளைப் பார்க்க வேண்டிய தில்லை. 

அதே போல், சாஃப்ட்வேர் டெவலப் பண்ணும் போது கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் முழுமை யாக ஆய்வு செய்தோம். 

நம்முடைய மாணவர் களுக்கு எது சிறந்ததாக இருக்கும் என்பதை முடிவு செய்து, இந்த மென் பொருளை வடிவமைத் திருக்கிறோம். 

எனவே, ஆன்லைன் கலந்தாய்வு என்பது முழுக்க முழுக்க வெளிப் படைத் தன்மை யுடன் நடக்க விருக்கிறது. இதில் எந்தவித சந்தேகமும் எழுப்ப வேண்டிய அவசிய மில்லை" என்றார் உறுதியாக.
Tags:
Privacy and cookie settings