மத்திய பிரதேசத்தில் செய்தி தாளில் டீ போடும் மனிதர் !

0
மத்திய பிரதேசத்தில் சந்தா கிராமத்தைச் சேர்ந்த அன்னுகா அன்னுபையா என்பவர் பேப்பர் பாத்திரத்தில் டீ போட்டுக் கொடுப்பது நம்ப முடியாத உண்மையாக இருக்கிறது.
மத்திய பிரதேசத்தில் செய்தி தாளில் டீ போடும் மனிதர் !
12 வயதில் இருந்து டீக்கடையில் வேலை பார்த்து வரும் இவருக்கு, இவரது தந்தை இந்த வித்தையை கற்றுக் கொடுத்துள்ளார்.

டீ போடுவது குறித்து அவர் கூறியதாவது,

6 இஞ்ச் அகலமும், நீளமும் கொண்ட செய்தித் தாளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு பாத்திரம் போல் செய்து கொண்டு காற்று புகாத வகையில் காட்டு முள்கள் கொண்டு நான்கு மூலை களையும் குத்திவிட வேண்டும்.

இந்த வகையான பேப்பர் பாத்திரத்தைச் செய்வதற்கு அகாசியா தார்ன்ஸ், அம்பர்லா தார்ன்ஸ் வகையான முட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அந்தப் பாத்திரத்தை அந்த முட்கள் கொண்டு காற்றுப்புகாத வகையில் இணைத்து, பேப்பரும் நெருப்பில் எரிந்து விடாமல் குத்தி வைக்க வேண்டும்

அதன்பின் 60 மில்லி பாலை அந்த பேப்பர் பாத்திரத்தில் ஊற்றி, டீத்தூள், சர்க்கரை ஆகிய வற்றைச் சேர்த்துடீ தயாரிக்க லாம். 

ஆனால், வழக்கான அடுப்பிலும், நெருப்பிலும் இல்லை. மாறாக, கிராமங் களில் பயன் படுத்தப்படும் ஊதுகுழல் மூலம் மெல்லிதான நெருப்பு வரும் அடுப்பில் இந்தக் காகித பாத்திரத்தை வைக்க வேண்டும்.

அவ்வப் போது நெருப்பு மேலே வரும் வகையில் வாயின் மூலம் காற்றை செலுத்தி பாத்திரத்தை சூடாக்க வேண்டும். அதிகமான நெருப்பு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

குத்தி யிருக்கும் முட்கள் மூலம் நெருப்பு பட்டு சூடாகி, பாலும் சூடாகத் தொடங்கும். அதன் பின் பால் கொதிநிலையை அடைந்து, டீ தயாராகும். 
இந்த வகையான பேப்பர் பாத்திரம் மூலம் அதிக பட்சம் 70 மில்லி டீ தயாரிக்க முடியும். பால் கொதி நிலையை அடையும் போது, பாத்திரத்தை ஈரமாக்கும். 

அதைத் தவிர்க்கும் வகையில், அவ்வப் போது நெருப்பை அதிகமான கொண்டு வந்தால், காகிதப் பாத்திரம் ஈரமாகாது. இது போன்று பேப்பர் பாத்திரத்தில் டீ போடும் முறையை நான் பொழுது போக்கா கவே செய்து வருகிறேன். 

யாரேனும் ஸ்பெசலாக ஆர்டர் செய்தால் அவர்களுக்காகச் செய்து கொடுப்பேன். 

இதற்காக நான் யாரிடமும் பணம் வாங்குவதில்லை. ஏறக்குறைய 5 நிமிடங் களில் பேப்பர் பாத்திரத்தில் டீ தயாரிக்க முடியும் என கூறி யுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings