கோழிக்கோடு: வௌவால் மற்றும் இதர விலங்கு களிடம் நடத்தப் பட்ட மருத்துவ பரிசோதனை யில், கேரளாவில் நிபா வைரஸ் விலங்குகள் மூலம் பரவவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
ஒரு பக்கம் விலங்குகள் மூலம் நிபா வைரஸ் பரவவில்லை என்பது மகிழ்ச்சியை அளித்தாலும், அது எங்கிருந்து பரவுகிறது என்பதை அறிய முடியாமல், மருத்துவக் குழுவினர் கலக்கத்தில் உள்ளனர்.
3 வௌவ்வால்கள், 4 ஆடுகள், 5 மாடுகள், 8 பன்றிகள் மருத்துவ சோதனைக்கு அனுப்பப் பட்டது. இதில் எதிலும் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை என்பதே இறுதி அறிக்கைக் கூறும் செய்தி.
இதனால், கூடுதலாக சில வௌவ்வால் களை நச்சுயிரியல் நிபுணர்கள் சேகரித்து சோதனை நடத்த திட்ட மிட்டுள்ளனர்.
பல்வேறு பகுதிகளில் வாழும் விலங்கு களை மருத்துவ பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி பரிசோதிக்கப் பட்டுள்ளது. இதுவரை எந்த விலங்கிடமும், நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட வில்லை.
அதே சமயம், நிபா வைரஸ் தாக்கி உயிரிழந் தவர்கள் பயன் படுத்திய கிணற்றுத் தண்ணீரில் வௌவ்வால் களின் எச்சம் இருந்தது கண்டறியப் பட்டது.
இதை யடுத்தே வௌவ்வால்கள் மூலமாக நிபா வைரஸ் பரவுவதாகக் கூறப்பட்டது.
ஆனால், வௌவ்வால் களிடம் நடந்த மருத்துவப் பரிசோதனை யில், நிபா வைரஸுக் கான தடயங்கள் கிடைக்கப் பெறாதது மருத்துவக் குழுவினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வௌவ்வால்களே நிபா வைரஸை பரப்புவதாக எடுத்துக் கொண்டாலும், இந்த பாலூட்டிகளின் இனப்பெருக்கக் காலம் இந்த மாதத்தோடு முடிவடைவ தால்,
ஆஸ்டியோ பொரோசிஸ் வர காரணமும் சிகிச்சையும் !
நிபா வைரஸ் தாக்கமும் நிச்சயம் குறையும் என்று மருத்துவக் குழுவினர் கருதுகிறார்கள்.
டிசம்பர் முதல் மே மாதம் வரை வௌவ்வால் களின் இனப்பெருக்கக் காலம். இந்த சமயத்தில் தான் நிபா வைரஸ் மிக வீரியமாக பரவுகிறது.
இந்த காலங்களில் வௌவ்வால் களின் சிறுநீர், மலம், இதர கழிவுகள் மூலமாக நிபா வைரஸ் வேகமாகப் பரவுவதாக நச்சுயிரியல் நிபுணர் மருத்துவர் கே.ஜே. ரீனா கூறுகிறார்.
நிபா வைரஸ் எங்கிருந்து பரவி யிருக்கிறது என்ற காரணியை கண்டறிய முடியாத நிலை இருப்பதால், நிபா வைரஸ் குறித்து ஏராளமான சந்தேகங் களும் பரவி வருகிறது.
அதாவது நிபா வைரஸ் பாதித்து முதலில் உயிரிழந்த மொஹம்மது சபித்-தின் பயண விவரங்களை பரிசோதிக்கு மாறு மக்கள் கூறுகிறார்கள்.
வயிற்றெரிச்சல் வர காரணம் சரக்கு... பிரியாணி... சிகரெட் இது போதும் !
அதாவது, மொஹம்மது சபித் மலேசியா வில் இருந்து சமீபத்தில் தான் நாடு திரும்பிய தாகவும், மலேசியாவில் தான் முதன் முதலாக நிபா வைரஸ் பாதிப்பு கண்டறி யப்பட்ட தாகவும்,
நாடு திரும்பிய சில நாட்களில் சபித் நிபா வைரஸ் தாக்கி மரணம் அடைந்த தாகவும் உள்ளூர் மக்கள் கூறு கிறார்கள்.
இந்த சாத்தியக் கூறுகளை சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் மறுக்கிறார்கள். ஏன் என்றால், நிபா வைரஸ் தாக்கிய ஒரு நபரால் எழுந்து நடக்கக் கூட முடியாது.
இந்த நிலையில் அவர் மலேசியா வில் இருந்து வந்திருக்கவே முடியாது. அதே சமயம், அவர் மலேசியாவில் இருந்து வரும் போதே நிபா வைரஸ் தாக்கி யிருந்தால்,
அவரது பயணத்தின் போது, நிபா வைரஸ் மற்றவர் களுக்கும் அதி வேகமாகப் பரவியிருக்கும்.
ஆனால் அப்படி நடக்க வில்லை என்பதால் மலேசியா விலேயே அவருக்கு நிபா வைரஸ் தாக்கி யிருக்கலாம் என்பதில் அடிப்படை உண்மை இல்லை என்கிறார்கள்.
Thanks for Your Comments