பிரித்தானிய தலைநகர் லண்டனில் சமீப காலமாக அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள் வெளியாகி யுள்ளன.
தலைநகர் லண்டனில் ஆண்டு பிறந்து இதுவரை 62 பேர் கொல்லப் பட்டுள்ளனர். இதில் 39 பேர் வாள் வெட்டுக்கு பலியாகி யுள்ளனர்.
குறித்த சம்பவமானது மேயர் சாதிக்கான் மீது அதிருப்தியை ஏற்படுத்தி யதுடன் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கையில் பொது மக்களுக்கு சந்தேகமும் ஏற்பட் டுள்ளது.
ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எவ்வித குறைபாடும் காணவில்லை எனவும், குற்றச் செயல்களை தடுப்பதில் பெருநகர பொலிசார் துரித நடவடிக்கை எடுத்து வருவதாக வும் சாதிக் கான் தெரிவித்துள்ளார்.
இதனிடையே லண்டனில் அதிகரிக்கும் வாள்வெட்டு சம்பவங் களால் மருத்துவ மனைகள் யுத்தப் பிரதேசமாக காட்சி அளிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குற்றஞ் சாட்டியுள்ளார்.
இருப்பினும், லண்டனில் சமீபத்திய தாக்குதல் களின் எண்ணிக்கையை ஒப்பிடுகை யில் அமெரிக்கா வின் மிகப்பெரிய 50 நகரங்களில் அரங்கேறும் குற்றச் செயல்களை விடவும் குறைவு என ஆய்வு முடிவுகள் சுட்டிக் காட்டியுள்ளன.
இந்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையான கால கட்டத்தில் லண்டனில் 100,000 பேரில் 1.8 பேர் மட்டுமே கொல்லப் பட்டுள்ளனர். இதில் 8 பேர் பயங்கர வாதத்தால் கொல்ல ப்பட்டுள்ளனர்.
ஆனால் கலிபோர்னியா மாகாண த்தில் உள்ள சான் டியாகோ நகரில் இது 2.2 என உள்ளது. அமெரிக்கா வின் நியூ யார்க் நகரில் இந்த எண்ணிக்கை 3.4 என உள்ளது.
மட்டு மின்றி டெட்ராயிட், மிச்சிகன் உள்ளிட்ட நகரங்களில் குடியிருக்கும் 100,000 பொது மக்களில் 39.7 பேர் இதுவரை கொல்லப் பட்டுள்ளனர்.
மேலும், நியூ ஆர்லியன்ஸ், லூசியானா உள்ளிட்ட நகரங்களில் இந்த எண்ணிக்கை 40.4 என உள்ளது. பால்டிமோர், மேரிலாண்ட் பகுதிகளில் இது 55.8 என உள்ளது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments