மருத்துவ மனையில் இறந்ததாக கூறிய பிறந்த குழந்தை மயானத்தில் உயிர்த் தெழுந்த சம்பவம் ஒன்று தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
தமிழகம் நெல்லை மாவட்டம் கீழப்பாவூரைச் சேர்ந்த 25 வயதான பெண்ணொருவர் பிரசவத்துக் காக சுரண்டை மருத்துவ மனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
நேற்றுக் காலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், சிறிது நேரத்திலேயே மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்தாகவும் உடனே அடக்கம் செய்யுமாறும் கூறி அனுப்பி யுள்ளார்.
பிறந்த சில நிமிடங்களில் தாய் கண் விழிக்காமல் இருக்கும் போதே குழந்தை இறந்து விட்டதை நினைத்து உறவினர்கள் கதறி அழுதபடி இறுதி சடங்கு செய்ய முயன்றுள்ளனர்.
அவர்களது வழக்கப்படி காது குத்தி தான் அடக்கம் செய்ய வேண்டும் என்பதால், மயானத்தில் குழந்தையை வைத்து விட்டு நகைக் கடையி லுள்ள ஒருவரை அழைத்து வந்து குழந்தைக்கு காது குத்தி யுள்ளனர்.
காது குத்தும் போது குழந்தை கதறி அழுவதைக் கண்டு திகைத்த உறவினர்கள் உடனடி யாக தென்காசி மாவட்ட மருத்துவ மனை அம்யூலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.
சிறிதும் தாமதிக்காமல் விரைந்த அம்யூலன்ஸில் குழந்தை மயானத்தி லிருந்து எடுத்து செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப் பட்டுள்ளது.
பின்னர் தென்காசி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக் காக பாளை ஹை கிரவுண்ட் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.
முறையாக பரிசோதனை செய்யாமல் குழந்தை இறந்து விட்டது என கூறிய மருத்துவ மனை மருத்து வர்களை உறவினர்கள் வன்மையாக கண்டித் துள்ளனர்.
அதே நேரத்தில், குறைவான நேரத்தில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை யளித்து பாளை மருத்துவ மனையில் அனுமதிக்க உதவிய அம்யூலன்ஸ் ஓட்டுநரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Thanks for Your Comments