தமிழக அரசைச் சாடும் மணியரசன்... இது திட்டமிட்ட சதி !

0
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொது மக்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந் துள்ளார்கள். 
தமிழக அரசைச் சாடும் மணியரசன்... இது திட்டமிட்ட சதி !

இதைக் கண்டித்து தஞ்சாவூரில் தமிழ்த் தேசியப் பேரியக் கத்தின் ஏற்பாட்டில் அனைத்துக் கட்சி கண்டனப் போராட்டம் நடை பெற்றது.


இதில் கண்டன உரையாற்றிய தமிழ்த் தேசியப் பேரியக்க த்தின் தலைவர் பெ.மணியரசன், ``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 

மக்கள் போராடுவதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம் ஆகியோரால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை. 

போராட்டம் நடத்திய பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திற்குள் அமர்ந்து, அற வழியில் போராடினால் என்ன தவறு?. 

இதனை அனுமதித்து தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்தியிருக்க வேண்டும். 

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக உறுதி மொழி கொடுத்தி ருந்தால், இந்தப் போராட்டம் அமைதி யாகவே முடிந்திருக்கும்.


போராடும் மக்களை பழித் தீர்க்க வேண்டும் என்ற வெறியோடு தான் முன் கூட்டியே 

வஜ்ரா வாகனம், கண்ணீர்ப் புகை குண்டுகளை காவல் துறையினர் கொண்டு வந்துள்ளார்கள். 

துப்பாக்கி ச்சூடு நடத்தி மக்களைக் கொல்ல வேண்டும் என ஆட்சியாளர்கள் முன் கூட்டியே தீர்மானித்து விட்டார்கள். 

இது எதிர் பாராமல் நிகழ்ந்த துயரம் அல்ல. கதிரா மங்கலம், நெடுவாசல், தூத்துக்குடி என மக்கள் தங்களது 

வாழ்வாதாரங்களைக் காப்பாற்றிக் கொள்ள எழுச்சியுடன் போராட்டங்கள் நடத்துவதை, மத்திய அரசால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை. 

பிரதமர் மோடியை மகிழ்ச்சியடைய வைப்பதற் காகத் தான் தூத்துக்குடி மக்களை முதல்வர் பழனிசாமி பலி கொடுத்தி ருக்கிறார். 


இந்தச் சம்பவத்திற்காக முதல்வர் பழனி சாமியை மோடி பாராட்டுவார். துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஸை அமித்ஷா பாராட்டக் கூடும். 

தூத்துக்குடி போலவே கதிரா மங்கலம், காவிரிப் போராட்டங் களில் அடக்கு முறையை ஏவக் கூடும். 

இதனை எதிர்கொள்ள மக்கள் பெரும் எண்ணிக்கை யில் போராட்டக் களத்திற்கு வர வேண்டும் என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings