நீட் தேர்வு எழுத கேரளா செல்லும் தமிழக மாணவ, மாணவி களுக்கு உதவும் வகையில்
உதவி மையங்கள் அமைக்க அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தர விட்டுள்ளார்.
மருத்துவப் படிப்புக் கான நீட் தேர்வு இந்தியா முழுவதும் மே 6-ம் தேதி நடை பெற வுள்ளது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப் பித்துள்ள தமிழக மாண வர்கள் ஏராளமா னோருக்குக்
கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங் களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன.
அதனால், மாண வர்கள் பெரும் அவதிக் குள்ளாகும் சூழல் உருவாகி யுள்ளது.
இந்த நிலை யில், நீட் தேர்வுக் காக கேரளா வரும் மாணவர் களுக்காகப் பேருந்து நிலை யங்கள்,
ரயில் நிலையங் களில் உதவி மையங்கள் அமைக்க மாவட்ட ஆட்சியர்கள், காவல் ஆணையர் களுக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தர விட்டுள்ளார்.
மேலும், மாணவர் களுக்குத் தேவை யான போக்கு வரத்து மற்றும் தங்குமிட வசதிகளை அமைத்துத் தர அவர் உத்தர விட்டுள்ளார்.
அவருடைய அறிவிப்பு க்குப் பாராட்டுகள் குவிந் துள்ளன.